யோகா என்பது நம் வாழ்கையில் கிடைத்த அற்புத கலை. யோகா செய்வதனால் மனதளவிலும் உடலளவிலும் நாம் பெரும் நன்மைகள் ஏராளம.இன்றைய நிலையில் நாம் வாழும் இந்த இயந்திர வாழ்கையில், யோகா செய்வதற்கான நேரம் கிடைப்பதே அரிது தான். இருந்த போதிலும் கிடைத்த நேரத்தில் யோகா செய்யலாமா என்றால், கூடாது என்பது தான் உண்மை.அதாவது யோகா செய்யும் நேரம் மற்றும் எந்தெந்த ஆசனத்தை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்பதை பார்கலாம் யோகா செய்யும் நேரம்காலை - 5.30 -7.30 amமதியம் - 11.30 am -1.30 pmமாலை- 5.30 - 7.30 pmஒருநாளைக்கு எத்தனை முறை செய்யலாம் ?1) வஜிராசனம் - 3 நிமிடங்கள்2) திரிகோணாசனம் - 3 முறை3) பிறையாசனம் - 3 முறை4) பாதஅஸ்தமனாசனம் - 3 முறை5) புயங்காசனம் - 3 முறை6) சலபாசனம் - 3 முறை7) தனுராசனம் - 3 முறை8) பட்சிமோத்தாசனம் - 3 முறை9) அர்த்தமத்தியேத்திராசனம் - 1 முறை10) பத்மாசனம் - 3 நிமிடங்கள்11) மச்சாசனம் - 5 முறை மூச்சை உள்இழுத்து வெளியேற்ற வேண்டும்12)யோகமுத்திரா - 3 முறை13) சவாசனம் - 2 நிமிடங்கள் மேற்குறிப்பிட்ட அனைத்து ஆசனத்தையும் ஒரு நாளைக்கு குறைந்த பட்சமாக 3 முறை செய்தாலே போதுமானதுஅதே வேளையில், ஏதாவது அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், எலும்பு சம்பந்தமான பிரச்னை மற்றும் சுவாச கோளாறு உள்ளிட்ட குறிப்பிட்ட சில பிரச்சனைகள் இருந்தால் அவர்கள் யோகா செய்யும் போது, யோகா ஆசிரியரிடம் முறையாக கேட்டு தெரிந்துக்கொள்வதே நல்லது என்பது குறிப்பிடத்தக்கது