உலக மக்கள் புத்தாண்டை 16 வெவ்வேறு நேரங்களில் வரவேற்று வரும் நிலையில்... எந்த நாடு முதலில் புத்தாண்டை வரவேற்கிறார்கள், கடைசியில் எந்த நாடு புத்தாண்டை கொண்டாடுகிறார்கள் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க..
இந்தியாவில் நாம் இரவு 12 மணிக்கு, 2023 ஆண்டை வழியனுப்பி வைத்து விட்டு 2024-ஆம் ஆண்டை வரவேற்கிறாம். ஆனால், சில நாடுகள்.. மாலை 3:45 மணிமுதலே புத்தாண்டை கொண்டாட துவங்கி விடுகிறார்கள். அப்படி வெவ்வேறு நேரத்தில், புத்தாண்டை கொண்டாடும் நாடுகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நம் பூமி பல விநோதங்களை உள்ளடக்கியது. பூமியின் சுழற்சியின் போது ஒரு நாட்டில் இரவு என்றால்... இன்னொரு நாட்டில் அந்த சமயம் பகலாக இருக்கும். நம் இந்தியாவில் 31-ஆம் தேதி இரவு 12 மணி ஆவதற்கு முன்பே, சில நாடுகளில்... புத்தாண்டு பிறந்து விடுகிறது. அப்படி பார்த்தல் பசுபிக்கில் அமைந்துள்ள சாதாம் தீவில் மாலை 3:45 மணிக்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
பசுபிக் தீவுகளில் மட்டும் அல்ல... மொத்தம் 16 வெவ்வேறு நேரங்களில், புத்தாண்டை உலக மக்கள் வரவேற்கிறார்கள். சரி முதலில் எந்த நாடு புத்தாண்டை கொண்டாடுகிறது என்பது பற்றியும், கடைசியாக புத்தாண்டை கொண்டாடும் நாடு எது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
சாதாம் தீவுகளிலில் ஜனவரி 1 சரியாக மாலை 3:45 மணிக்கு பிறக்கிறது. இவர்கள் தான் முதல் முதலில் புத்தாண்டை வரவேற்கிறார்கள்.
நியூசிலாந்தில் உள்ள மக்கள் மாலை 4:30 மணிக்கு புத்தாண்டை ஒவ்வொரு வருடமும் வரவேற்கிறார்கள்.
ரஷ்யாவின் ஒரு பகுதி மக்கள், மாலை 5:30 மணிக்கு புத்தாண்டை வரவேற்கின்றனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி, கான்பெரா, ஹோனியாரா போன்ற நாடுகளில் வாழும் மக்கள் மாலை 6:30 மணிக்கு புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.
டபுள் ஆக்ஷனில் விஜய்... புத்தாண்டுக்கு டபுள் ட்ரீட் ஆக வெளிவந்த தளபதியின் GOAT பட பர்ஸ்ட் லுக்
அடிலைய்டு, புரோக்கன் ஹில், செடுனா போன்ற நாடுகளில் வசிப்போர் இரவு 7 மணிக்கு புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.
பிரிஸ்பேன், போர்ட் மோர்ஸ்பை, ஹகத்னா ஆகிய நாடுகளில் வசிப்போர் 7:30 மணிக்கு புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.
டார்வின், அலைஸ் ஸ்பிரிங்ஸ், டெனண்ட் கிரீக் நாட்டில் இருக்கும் மக்கள் 8 மணிக்கு புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.
ஜப்பான், தென் கொரியாவின் டோக்யோ, சியோல், பியாங்யாங்க், டிலி, நெருல்மட் போன்ற நாட்டில் வாழும் மக்கள் இரவு 8:30 மணிக்கு புத்தாண்டை வரவேற்கின்றனர்.
சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாட்டில் வாழும் மக்கள் 9:30 மணிக்கு புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.
இந்தோனேசியா, தாய்லாந்தில் வாழும் மக்கள் 10:30 மணிக்கு 2024-ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கின்றனர்.
மியான்மர் நாட்டில் இருக்கும் மக்கள் 10:30 மணிக்கு புத்தாண்டை தங்களின் வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டும் வரவேற்கிறார்கள்.
வங்கதேசதில் வசிப்பவர்கள் காலை நிகழ்ச்சியுடன் ஒவ்வொரு ஆண்டும் 11:30 மணிக்கு புத்தாண்டை வரவேற்கின்றனர்.
நேபாளத்தின் காட்மண்ட், பொக்காரா, பிரட் நகர், டாரன் போன்ற நாடுகளில் இரவு 11:45 மணிக்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
இதை தொடர்ந்து சரியாக இரவு 12:00 மணிக்கு புத்தாண்டை கொண்டாடுகிறது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள்.
இந்தியாவை தொடந்து பாகிஸ்தான் இரவு 12:30 மணிக்கு 2024 ஆம் ஆண்டை வரவேற்கிறது.
இந்த லிஸ்டில் கடைசியாக புத்தாண்டை வரவேற்கும் நாடு, ஆப்கானிஸ்தான் தான். சரியாக இரவு 1 மணிக்கு ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டத்துடன் அந்நாட்டு மக்கள் புத்தாண்டை வரவேற்கிறார்கள்.