
முகத்தை எப்போதும் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்பது பெண்களின் எண்ணங்களாக இருந்து வருகிறது. இதற்காக அவர்கள் சரும பராமரிப்பு முறையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் முகத்தை அழகாக மாற்ற கடைகளில் பலவகையான அழகு சாதனப்பொருட்கள் விற்படுகின்றன. இவற்றை தேர்ந்தெடுப்பதை விட இயற்கை வழியில் செல்வது நல்ல பலனை தரும்.
இந்நிலையில் பெண்களின் முகத்தின் அழகை கெடுக்கும் முடி வளர்ச்சியை எவ்வாறு தடுப்பதை என்பதை பார்ப்போம். முகத்தில் உள்ள முடியை அகற்ற கடலை மாவு முக்கிய பங்கு வகிக்கிறது. இது முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி முடி வேர்களை பலவீனப்படுத்தி உதிர செய்கிறது. இது தோல் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தாத இயற்கை முறையாகும். வறண்ட சருமம் இருப்பவர்கள் கடலை மாவுடன் கூடுதலாக பால், தயிர் மற்றும் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: Heart Attack: சைலண்ட்டாக வரும் ஹார்ட் அட்டாக்.. யாருக்கெல்லாம் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு? அறிகுறி என்ன?
செய்முறை :
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் தேவையான கடலை மாவு, மஞ்சள் தூள் இரண்டையும் சேர்த்து கலக்கவும். இதனுடன் பால் அல்லது தயிர் எதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளவும். சிறிதளவு தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின்னர் அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து, மென்மையான பேஸ்ட்டை உருவாக்க நன்கு கலக்கவும்.
பின்னர் உங்கள் சருமத்தை நன்கு சுத்தம் செய்து அழுக்கு மற்றும் எண்ணெய் தன்மை இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு உங்கள் விரல்களில் எடுத்து முகத்தில் தேவைற்ற முடிகள் இருக்கும் இடத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்கவும். அதன் பிறகு உங்கள் விரல்களை ஈரப்படுத்தி சருமத்தில் லேசாக மசாஜ் செய்யவும். இது சருமத்தில் உள்ள முடியின் வேர்களை பலவீனப்படுத்த உதவுகிறது. பின்னர் உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி விட்டு, லேசான மாய்ஸ்சரைசரை தடவவும். இதனால் உங்கள் சருமம் நீரேற்றமாக இருக்கும்.
இதையும் படிங்க: Kidney Failure Symptoms: ஒரு கிட்னியுடன் வாழ முடியுமா? சிறுநீரகம் செயலிழந்து போவதை எப்படி கண்டுபிடிப்பது?
மஞ்சள் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது இது சருமத்தில் முடி வளர்ச்சியைக் குறைக்க உதவுகிறது. பால் அல்லது தயிர் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. தேன் சருமத்திற்கு பளபளப்பை தர உதவும், எலுமிச்சை சாறு சருமத்தை ஒளிரச் செய்ய உதவுகிறது, மேலும் ரோஸ் வாட்டர் சருமத்திற்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.