வெறும் நடையை வைத்தே உங்க மொத்த ஜாதகத்தையும் கண்டுபிடிக்கலாம் தெரியுமா? இந்தமாதிரி நடக்குறவங்ககிட்ட பணம் சேரும்

By Kalai Selvi  |  First Published Aug 13, 2024, 8:16 PM IST

Personality Test  : ஒருவரின் ஆளுமை பண்புகளுக்கும் அவருடைய நடைக்கும் சம்பந்தம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்கள் எப்படி நடக்குறீர்கள் என்பதை வைத்தே அதை கணிக்கலாம். 


பொதுவாக நம்முடைய செயல்கள் நம்மை யாரென்று காட்டிக் கொடுக்கும். நமது முகபாவனைகள், வார்த்தைகள், உடை எல்லாம் தான் நம் மனநிலையை, ஆளுமையை காட்டும் என்று நினைத்திருப்போம். ஆனால் நமது ஆளுமை திறனை நாம் நடந்து செல்லும் தோரணையும் வெளிப்படுத்தும் என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆய்வுகளின் படி ஒருவர் வேகமாக அல்லது மெதுவாக நடப்பவராக இருந்தால் அதற்கு ஏற்றார் போல அவர்களுடைய ஆளுமை பண்புகள் வேறுபடும் என கூறப்படுகிறது. இது இப்போது கண்டுபிடிக்கப்பட்டதல்ல. இதன் ஆய்வுகள் 1935லே தொடங்கிவிட்டது. 

ஜெர்மன் உளவியலாளர் வெர்னர் வோல்ஃப் தான் 1935ல் அந்த ஆய்வை செய்தார். இதன் தொடர்ச்சியாக ஒருவரின் நடைப் பாணி குறித்த ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் ஒருவர் நடக்கும் ஸ்டைல், வேகம், அவர் எட்டு வைக்கும் தூரம் எல்லாவற்றை பொறுத்தும் அவரது ஆளுமை பண்புகள் விளக்கப்படுகின்றன. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  நீங்க ஹேண்ட் பேக்கை போடும் ஸ்டைலை வச்சு உங்கள பத்தி சொல்ல முடியும் தெரியுமா?

வேகமாக நடப்பவர் எப்படிப்பட்டவர்கள்?  

ஒருவர் வேகமாக நடக்கும் பழக்கம் கொண்டிருந்தால் அவரிடம் விடாமுயற்சி நிச்சயம் இருக்கும். போராடும் ஆற்றல் உள்ளவர். தன் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசி விடுவார். இந்த ரக ஆட்கள் புதிய அனுபவங்களை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள்.  மனசாட்சிக்கு பயந்து வாழ்பவர்களாக இருப்பார்கள்.  வேகமாக நடப்பவர்கள் பெரும்பாலும் சவால்களை சந்திக்க தயாராக இருப்பார்கள்.  இவர்களிடம் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மற்றவர்களை விட முன்மாதிரியாக திகழும் ஆளுமை இவர்களுக்கு அதிகம் இருக்கும். தைரியமிக்கவர்கள். 

மெல்ல நடை போடுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

அன்னத்தைப் போல மெதுவாக நடை போடுபவர்கள் எதையும் சிந்தித்து செயலாற்ற கூடியவர்கள். எல்லா விஷயத்திலும் எச்சரிக்கையாக இருப்பார்கள். இவர்களுடைய நடையை போலவே வாழ்க்கையில் முன்னேற்றமும் மெதுவாகத்தான் இருக்கும். எதையும் சீக்கிரமாக வெளிப்படுத்தும் குணம் கொண்டிருக்கமாட்டார்கள். கொஞ்சம் சுயநலமிக்க இவர்கள், தனக்கானதை தாமே செய்து கொள்வார்கள். யாரையும் சார்ந்திருக்கமாட்டார்கள். கூட்டத்திற்குள் செல்வதை விரும்பமாட்டார்கள். சொந்தமாக தொழில் செய்வதில் திருப்தியடைவார்கள். மெதுவாக நடக்கு பழக்கத்தால் சில உடல்நலப் பிரச்சினையை சந்திக்க வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க: Personality Test : நீங்கள் பேனா பிடித்திருக்கும் ஸ்டைல் வச்சி உங்களை பற்றி தெரிஞ்சுக்கலாம் தெரியுமா..?

நிதானமாக நடப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்? 

நிதானமாக நடக்கும் பழக்கம் உடையவர்கள் தங்களது வாழ்க்கையில் சொந்த முடிவு எடுப்பவர்களாக இருப்பார்கள். அவசரமாக எதையும் செய்யமாட்டார்கள். வாழ்க்கையை குறித்து திருப்தியும், நம்பிக்கையும் கொண்டிருப்பார்கள். பிறருடன் பழகுவதை விரும்புவார்கள்.  பிறரின் கருத்தை கேட்கும் பக்குவம் கொண்டவர்கள். தலை நிமிர்ந்து நடக்கும் பழக்கம் இருக்கும். எந்த சூழலிலும் தன்னம்பிக்கை கொண்டிருப்பார்கள். 

பெரிய அடியை வைத்து வேகமாக நடப்பவர்கள்..

வேகமாக நடப்பதுடன் பெரிய அடியையும் எடுத்து வைப்பவராக இருந்தால் போட்டி மனப்பான்மை கொண்டவராக இருப்பார்கள். அறிவார்ந்தும் தர்க்கரீதியாகவும் யோசிப்பவர்கள். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.  நடக்கும் போது கூட தன்னுடன்  நடந்து வருபவர்களின் கண்களை பார்த்து பேசும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களுடைய வாழ்க்கையை குறித்து மட்டும் சிந்திக்காமல் தன்னை சுற்றி வாழ்பவர்களுடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய முயற்சி செய்வார்கள். 
 
கால்களை இழுத்து கொண்டே நடப்பவரின் ஆளுமை:

இது மாதிரி நடப்பவர்கள் கவலைப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். கால்களை இழுத்துக் கொண்டே நடப்பவர்கள் குறித்த ஆய்வில், அவர்கள் தங்களை சோகத்தில் மூழ்கடித்து கொள்பவர்கள் என தெரியவந்துள்ளது. இக்கணத்தில் வாழ்வதை விடவும், ஏற்கனவே நடந்த சோகத்தை நினைத்து கவலைப்படுவதை இவர்களுடைய வழக்கமாக இருக்கும். தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதில் திறனின்றி பலவீனமானவர்களாக இருப்பார்கள். மனதில் உள்ளதை சொல்லக்கூடிய திறன் இவர்களுக்கு குறைவு. தினசரி வாழ்க்கையில் ஆர்வமும், ஆற்றலும் இல்லாதவர்களாக காணப்படுவார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!