வாயில் உள்ள கெட்ட நாற்றத்தை போக்க காலையில் செய்ய வேண்டிய 5 படிநிலைகள்.. நிபுணர்களே சொன்னது!

By Kalai Selvi  |  First Published Aug 14, 2024, 7:30 AM IST

Bad Morning Breath : இரவு பற்களை நன்றாக சுத்தம் செய்தாலும் காலையில் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? இந்த பதிவு உங்களுக்கானது தான்.


நீங்கள் காலையில் எழுந்ததும் முந்தின நாள் இரவு பற்களின் நன்கு சுத்தம் செய்தாலும் கூட உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? ஏனெனில், இரவில் உங்கள் வாயில் அதிக உமிழ்நீர் வெளியேறாதது மற்றும் வாய் வறட்சியாக இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

அதுமட்டுமின்றி, நீங்கள் மூக்கின் வழியாக சுவாசிப்பதாலும், வாயை மூடிக் கொண்டு தூங்குவதாலும் இந்த மாதிரி வாய் துர்நாற்றம் அடிக்கிறது. ஆனால், நிபுணர்கள் வாய் துர்நாற்றத்தை சமாளிக்க சில 5 விஷயங்களை கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும் நிச்சயமாக நீங்கள் பற்களை தினமும் துலக்கினால் மட்டுமே துர்நாற்றத்தை நிறுத்த முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து விரிவாக இப்போது இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  வாய் துர்நாற்றம் எதனால் வருகிறது? அதனைப் போக்க சில டிப்ஸ்…

1. நாக்கை சுத்தம் செய்யுங்கள்: நீங்கள் எவ்வளவுதான் உங்கள் பற்களை சுத்தம் செய்தாலும், உங்கள் நாக்கை சுத்தம் செய்ய ஒருபோதும் மறக்காதீர்கள். ஆனால் நிறைய பேர் இதை ஒருபோதும் செய்வதில்லை. ஒருவேளை, நீங்கள் உங்கள் நாக்கை ஒழுங்காக சுத்தம் செய்யவில்லை என்றால், அதில் ஒட்டியிருக்கும் அனைத்து பாக்டீரியாக்களும் ஒன்று சேர்ந்து மோசமான வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும். எனவே உங்கள் வாயிலிருந்து துர்நாற்றம் அடிக்காமல் இருக்க தினமும் நாக்கை சுத்தம் செய்யுங்கள்.

2. நீரேற்றமாக இருங்கள்: நீங்கள் எப்போதும் நீரேற்றமாக இருந்தால் வாய் துர்நாற்றம் தடுக்கப்படும். நீங்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதினால் உங்களது வாய் சுத்தமாகும் மற்றும் துர்நாற்றம் வீசுவதும் குறையும். 

இதையும் படிங்க: பல் துலக்கும் போது ஈறுகளில் இரத்தம் வருகிறதா..? காரணம் தெரியுமா..?

3. சரியாக சாப்பிடுங்கள்: வாய் துர்நாற்றம் வீசுவதை தடுக்க சாப்பிடும் உணவு ஒரு பெரிய பங்கை வகிக்கிறது. ஏனெனில், நீங்கள் காலை உணவை சரியாக சாப்பிட்டால் குடலிறக்கம் ஏற்படாது. மேலும், நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.

4. லாக்டோபாசில்லஸ் : மேலே சொல்லப்பட்ட எதுவும் உங்கள் வாய்துர்நாற்றத்தை போக்கவில்லை என்றால் வேறு சில விஷயங்களையும் நீங்கள் முயன்று பார்க்கலாம். மருத்துவ பரிந்துரை இல்லாமலே கிடைக்கக் கூடிய லாக்டோபாசில்லஸ் (Lactobacillus) என்ற மருந்து உங்களை வாய்துர்நாற்றத்தில் இருந்து காப்பாற்றும். இது உங்களின் வாயில் இருக்கும் கெட்ட பாக்டீரியாவைக் குறைக்க உதவும்.

5. மருத்துவரிடம் சென்று பாருங்கள் : இயற்கையான வழிமுறைகளை முயன்றும் வாய்துர்நாற்றத்தில் இருந்து உங்களால் மீள முடியவில்லை எனில் மருத்துவரிடம் சென்று பாருங்கள். ஏனெனில் பல் மருத்துவரை காட்டிலும் உங்களுடைய வாய் சுகாதாரத்தை மேம்படுத்த வேறு யாராலும் முடியாது. அதனால் ஒருமுறை அவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!