
T.balamurukan
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டம், சோகவுரா என்ற கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு 'கொரோனா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாட்டில் 30 மாநிலங்களையும் முழுமையாக முடக்க அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.இதற்கிடையே, பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில்,உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம், சோகவுரா என்ற கிராமத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்ததுள்ளது.அதற்கு பெற்றோரின் சம்மதத்துடன், குழந்தையின் மாமா நிதேஷ் திரிபாதி என்பவர் 'கொரோனா' என்று பெயர் சூட்டியுள்ளார்.
உலகம் முழுவதும் வைரலான இந்த வைரஸின் பெயரைக் கொண்ட குழந்தை, உத்தரப்பிரதேசம் முழுவதும் பிரபலம் ஆகி விட்டது. கொலைகார வைரஸின் பெயரையா குழந்தைக்கு சூட்டுவார்கள் என்று பலரும் திரிபாதியிடம் உறவினர்கள் பலரும் கேள்வி கேட்க அதற்கு அவரோ, 'கொரோனா வைரஸ் ஆபத்தானது என்பதில் சந்தேகம் இல்லை. அது ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று வருகிறது.மக்களிடம் பல நல்ல பழக்கங்கள் ஏற்படுவதற்கு கொரோனா காரணமாக உள்ளது. கொரோனாவால் உலக மக்கள் ஒற்றுமையுடன் இருக்கின்றனர். இந்தக் குழந்தை மக்கள் ஒற்றுமையின் சின்னமாக, தீமைகளை எதிர்த்து போராடுபவளாக இருப்பார்' என்று பதில் அளித்திருக்கிறார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.