மின்கட்டணம் செலுத்துவதில் மின்சார வாரியம் சலுகை .

By Thiraviaraj RMFirst Published Mar 23, 2020, 9:19 PM IST
Highlights

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, வீடுகளில் 'மின்சார ரீடிங்' எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் மார்ச் மாதத்துக்கான 'கரண்ட் பில்' கட்டினால் போதும் என்று  நுகர்வோருக்கு மின்சார வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

T.Balamurukan

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, வீடுகளில் 'மின்சார ரீடிங்' எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் மார்ச் மாதத்துக்கான 'கரண்ட் பில்' கட்டினால் போதும் என்று  நுகர்வோருக்கு மின்சார வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

 கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, 2020 மார்ச் மாத பட்டியலுக்கு, 22 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை, மின்சார ரீடிங் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜனவரி, பிப்ரவரி மாத கணக்கீட்டின்படியே, நுகர்வோர் பணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.கூடுதலாகவோ, குறைவாகவோ செலுத்தப்படும் கட்டணம், பின்வரும் மாத கணக்கில் மின்கட்டணத்தில் சரி செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்கட்டணத்தை செலுத்த நுகர்வோர் நேரடியாக மின்வாரிய அலுவலக மையங்களுக்கு வருவதை தவிர்ப்பதற்காக இணையதளம், மொபைல் ஆப் ஆகியவற்றின் மூலம் மின்கட்டணத்தை செலுத்தலாம் என்று மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள வீடுகள், கடைகளில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் ஊழியர்கள் கரண்ட் ரீடிங் எடுத்து வருகின்றனர்.

மின்ரீடிங் எடுத்த நாளில் இருந்து 20 தினங்களுக்குள் நுகர்வோர் மின்கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையென்றால், மின் இணைப்பு துண்டிக்கப்படும். பின்னர் அபராதத் தொகையுடன் கட்டணத்தை செலுத்திய பின்னரே, மீண்டும் மின் விநியோகம் தரப்படும். இது மின்வாரியத்தின் விதி. ஆனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, தற்போது பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மார்ச் மாதம் மின்கட்டணம் செலுத்துவதில் மின்வாரியம் சலுகையை அறிவித்துள்ளது.

click me!