சாப்பாட்டுக்கு கவலை வேண்டாம்...! அம்மா உணவகம் திறந்தே இருக்கும்..!

By ezhil mozhiFirst Published Mar 23, 2020, 4:12 PM IST
Highlights

பல்வேறு வேலைகளுக்காக சென்னையில் பல்வேறு விடுதிகளில் தங்கி இருப்பவர்களுக்கு எதுவாகவும், வெளியில் சிக்கி தவிப்பவர்களுக்கு வயிறார உணவளிக்க அம்மா உணவகம் இயங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார் 

சாப்பாட்டுக்கு கவலை வேண்டாம்...! அம்மா உணவகம்  திறந்தே இருக்கும்..! 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதன் படி, நாளை காலை 6 மணி முதல் வரும் 31-ஆம் தேதி வரை அனைத்து எல்லைகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கும் என்பதை உறுதி செய்து உள்ளது தமிழக அரசு. அதன்படி பால், காய்கறி, கடைகள், இறைச்சி கடைகள் இயங்கும் என்றும் அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ் சேவை, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் என்றும், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும் என்றும் மற்றபடி அனைத்து வணிக வளாகங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

அம்மா உணவகம்

பல்வேறு வேலைகளுக்காக சென்னையில் பல்வேறு விடுதிகளில் தங்கி இருப்பவர்களுக்கு எதுவாகவும், வெளியில் சிக்கி தவிப்பவர்களுக்கு வயிறார  உணவளிக்க அம்மா உணவகம் இயங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார் 

வீடுகள் தவிர விடுதிகளில் தங்கி இருப்பதற்கு உணவுகள் கிடைக்கும் விதத்தில் உணவகங்கள் செயல்படவும்  அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

click me!