"பெத்த மகளுக்கு பிரசவம் பார்த்த தந்தை" கொரோனா ஊரடங்கு அன்று நடந்த கொடுமை..!!

By Thiraviaraj RMFirst Published Mar 23, 2020, 8:31 PM IST
Highlights

ஆம்புலன்ஸ் வாகனம் கிடைக்காததால் பெற்ற மகளுக்கு நடுவழியிலேயே பிரசவம் பார்த்திருக்கிறார் தந்தை ஒருவர். இச்செய்தி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. 
 

T.Balamurukan 

ஆம்புலன்ஸ் வாகனம் கிடைக்காததால் பெற்ற மகளுக்கு நடுவழியிலேயே பிரசவம் பார்த்திருக்கிறார் தந்தை ஒருவர். இச்செய்தி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பாரத பிதமர் மோடி இந்திய மக்களுக்கு விடுத்த வேண்டுகோளையடுத்து மார்ச் 22 அன்று மக்களால் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.இந்தியாவில் உள்ள மாநில அரசுகளும் சுய ஊரடங்கு முயற்சிக்கு ஆதரவு அளித்து கட்டுப்பாடுகளை விதித்தன. பேருந்து, ரயில் உட்பட போக்குவரத்து வசதிகளும் நிறுத்தப்பட்டது.பெரும்பாலும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தனர். அத்தியாவசியத் தேவைகள் தொடர்பான ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர்.

 

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் முதலமடை சுள்ளியார் டேம் பகுதியை சேர்ந்த பிரகாசம் என்பவரின் மகள் தேவி. இவருக்கு வயது27, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு இம்மாதம் 29ஆம் தேதி குழந்தை பிறக்கும் என்று பாலக்காடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று தேவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த தந்தை, மகளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றார்.ஆனால், போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு வழியாக அவசரகால ஆம்புலன்ஸ் வரவழைத்த தந்தை, மகளுடன் மருத்துவமனைக்கு புறப்பட்டார்.நடுவழியிலேயே பிரசவ வலியில் துடித்தார் தேவி. இதனையடுத்து அவசர மருத்துவ சிகிச்சை வாகனம் நிறுத்தப்பட்டது.அந்த இக்கட்டான நிலையில் தந்தையே மகளுக்கு பிரசவம் பார்த்தார். குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியை துண்டிக்காமல் அப்படியே தாயின் மார்பில் குழந்தையை அணைத்தவாறு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.


 

click me!