Parenting Tips : வெயில் ரொம்ப அடிக்குதுனு குழந்தையை ஏசி ரூம்ல தூங்க வைக்கிங்களா..? ஜாக்கிரதை!!

By Kalai SelviFirst Published Apr 6, 2024, 8:07 PM IST
Highlights

கோடை காலதில் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசியானது சிறு குழந்தைகளின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? 

தற்போது கோடை காலம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பலர் தங்களது வீடுகளில் ஏசியின் பயன்பாடு அதிகமாகவே இருக்கும்.. இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், ஏசியை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. ஆனால் சிறு குழந்தைகளுக்கு ஏசி நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா..? 

ஆம்..எப்படியெனில், ஏசி தொடர்ந்து பயன்படுத்துவது குழந்தைகளின் உடல் வளர்ச்சியையும் அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், குழந்தைகளின் தோல் மிகவும் மென்மையானது. ஏசி குளிர்ந்த மற்றும் வறண்ட காற்றை தொடர்ந்து வெளியிடுவதால் குழந்தைகளுக்கு தோலில் வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படலாம். இது தவிர, அந்த குளிர்ந்த காற்று குழந்தைகளின் மூக்கு மற்றும் தொண்டையை பாதிக்கும். மேலும் இது அவர்களுக்கு சுவாச பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.

ஏசி குழந்தைகளுக்கு எப்படி பாதிப்பை ஏற்படுத்தும்?
பொதுவாகவே, ஏசியானது காற்றை சுத்தப்படுத்துகிறது. ஆனால் அது காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை குறைக்கிறது தெரியுமா..? மேலும் இதிலிருந்து வரும் வறண்ட காற்று சுவாச மண்டலத்தை எரிச்சலூட்டும். குறிப்பாக, ஏற்கனவே ஆஸ்துமா அல்லது சுவாசிப்பதில் சிக்கல் உள்ள குழந்தைகளுக்கு, தொடர்ந்து வறண்ட காற்றானது அவர்களின் நாசிப் பாதைகளை உலர்த்துகிறது. இதனால் தூசி மற்றும் பாக்டீரியாக்கள் குழந்தைகளின் உடலில் எளிதாக நுழையும்.

இதையும் படிங்க: Parenting Tips : மகளை பெற்ற ஒவ்வொரு தந்தைக்கான பதிவு இது..! கண்டிப்பாக படிங்க..!

உங்களுக்கு தெரியுமா.. குழந்தைகளுக்கு குளிர்ச்சியான சூழல் தேவையில்லை. ஏனெனில், அவர்களின் வளர்ச்சிக்கு சமச்சீரான வெப்பநிலை மிகவும் அவசியம். மிகவும் குளிர்ச்சியான சூழலில் குழந்தைகள் இருந்தால், அது அவர்களின் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் திறனை பலவீனப்படுத்தும். இதனால், வானிலை மாற்றத்தினால் கூட அவர்களுக்கு சீக்கிரம் சளி பிடிக்கும் அபாயத்தை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, குளிர் சூழலில் இருக்கும் குழந்தையின் உடலின் செயல்பாடானது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். இதனால், குழந்தைகளின் உடல் வளர்ச்சி ரொம்பவே பாதிக்கப்படும்.

இதையும் படிங்க: Parenting Tips : பெற்றோர்களே.. காலையில் குழந்தைகளிடம் 'இந்த' விஷயங்களை சொல்ல மறக்காதீங்க!!

ஏசியை பயன்படுத்தும் முறை:

இதற்கு ஏசியைப் பயன்படுத்தவே கூடாது என்று அர்த்தப்படுத்துவதில்லை. கோடை காலத்தில், தேவைக்கேற்ப மட்டும்  ஏசியை சிறிது நேரம் பயன்படுத்துங்கள். மேலும் ஏசியின வெப்பநிலையை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை வையுங்கள். அதுதான் நல்லதும் கூட. முக்கியமாக, அறையின் வெப்பநிலையை திடீரென குறைக்க வேண்டாம் மற்றும் அறையில் போதுமான அளவு ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்துவதன் மூலம் காற்றில் ஈரப்பதத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம்.

குழந்தைகளுக்கு இயற்கை காற்று அதிக நன்மை பயக்கும்:

  • பொதுவாகவே, சிறு குழந்தைகளுக்கு இயற்கை காற்று சூழல் மிகவும் நல்லது. எனவே, முடிந்தவரை அறையின் ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். 
  • அதுபோல, குழந்தைகளை காலை சூரிய ஒளியில் தவறாமல் காட்டுங்கள். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
  • முக்கியமாக, ஏசி பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருங்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ஏனெனில், ஒரு சிறிய கவனக்குறைவு கூட உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!