
பசுவிலிருந்து கிடைக்கும் பஞ்சகவ்யதை வீட்டில் தெளித்தால்...பணப்பிரச்சனை நீக்கி,லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும் என்பது நம்பிக்கை.
கோமாதா என்று அழைக்கப்படும் பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும். பசு மாட்டின் தலை முதல் வால் வரை எல்லா இடங்களிலும் தேவர்களும், தெய்வங்களும் வசிப்பதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. "மா" என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது. பசு வசிக்கும் இடத்தில், அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு மடங்கு பலன்களை அள்ளித் தரும்.
பசுக்கள் மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பும் போது அதாவது அந்திப் பொழுதில் அவற்றோடு சீதேவியும் வீட்டுக்கு வருவாளாம். எனவே வீடு திரும்பும் பசுக்களை நல்ல முறையில் வரவேற்க வேண்டும். பலவித கிரக கோளாறுகளால் பீடிக்கப்பட்டவர்களும் தீராத வியாதிகளால் அவதிப்படுபவர்களும் தங்கள் பீடைகளிலிருந்து விடுபடுவதற்கு கோதானம் என்னும் பசுதானம் செய்து வழிபட்டால் நலம் பெறலாம்.
அப்படியான, பசுவிலிருந்து கிடைக்கும் பஞ்சகவ்யதை வைத்து வீடு முழுவதும் எப்படி லட்சுமி கடாட்சத்தை பெருகச் செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
வாரம் ஒரு முறை துளசி தீர்த்தம், மஞ்சள் தண்ணீர் போன்றவற்றை வீடு முழுவதும் தெளித்து வந்தால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அகலும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில், பசுவிலிருந்து கிடைக்கக் கூடிய பஞ்சகவ்யம் நம் குடும்பத்தை செல்வ செழிப்புடன் இருக்க செய்யும்.
பஞ்சகவ்யம் என்றால் என்ன?
பசுவில் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், சாணம், கோமியம் ஆகியவற்றின் கலவையை பஞ்சகவ்யம் என்று கூறுவார்கள். இந்த பஞ்சகவ்யத்தை கொண்டு தீபங்கள் தயாரிப்பதும் உண்டு. பஞ்சகவ்ய தீபத்தில் விளக்கு ஏற்றி வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்.
மேலும், தீராத கடன் பிரச்சினைகள் தீர்ந்து, செல்வ வளம் பெருகும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த பஞ்சகவ்யத்தில் எதிர்மறை ஆற்றல்களை முற்றிலுமாக அழிக்கும் தன்மை உண்டு. எனவே வீட்டில் வாரம் ஒருமுறை பஞ்ச கவ்யத்தை தெளித்து, வீட்டில் இருக்கும் அத்துணை துஷ்ட சக்திகளை விரட்டியடித்து லட்சுமி கடாட்சத்தை பெருக செய்யலாம் என்பது ஐதீகம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.