Special Tomato recipe: இந்த ஒரு தக்காளி ரெசிபி போதும்...இனி ஒருவாரம் வீட்டில் குழம்பு செய்ய வேண்டாம்..!

By Anu Kan  |  First Published Mar 2, 2022, 1:37 PM IST

Special Tomato recipe: சுவையான தக்காளி ரெசிபியை, இப்படி செய்து ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்தால், ஒரு வாரம் ஆனாலும், வீட்டில் குழம்பு செய்ய தேவையில்லை. 


சுவையான தக்காளி தொக்கு ரெசிபி, இப்படி செய்து ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்தால், ஒரு வாரம் ஆனாலும், வீட்டில் குழம்பு செய்ய தேவையில்லை. மேலும், பக்கத்து வீட்டில் இருப்பவர்களும் உங்களிடம் வந்து கேட்பார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை எட்டு வீடும் மணக்கும். இந்த சுவையான தக்காளி ரெசிபி எப்படி செய்யலாம் என்பதை வாருங்கள் தெரிந்து கொள்வோம். 

Latest Videos

undefined

தேவையான பொருட்கள்: 

தக்காளி – ஒரு கிலோ

பூண்டு – 100 கிராம்

வரமிளகாய் – 15

காஷ்மீரி சில்லி – 5

மிளகாய் தூள் – அரை ஸ்பூன்

பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்

எண்ணெய் – 300 கிராம்

உப்பு – 2 ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்.

செய்முறை விளக்கம்: 

1. முதலில் 100 கிராம் பூண்டைஎடுத்து தோல் உரித்து சுத்தம் செய்து, அவற்றை நீளவாக்கில் மிகவும் மெல்லியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்ன,ர் மிளகாய்களை அதன் காம்புகளை கிள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, 4 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

2. தண்ணீர் மிதமான சூட்டிற்கு வந்ததும் அதில் ஒரு கிலோ மிகவும் பழுத்த தக்காளி பழங்களை சேர்க்கவேண்டும். (குறிப்பு: நல்ல பழம் போன்று  இருக்கும் தக்காளி பழங்களை இதில் சேர்க்க வேண்டும்). அதன்பின் 15 வரமிளகாய் மற்றும் 5 காஷ்மீரி சில்லி இவற்றையும் இந்த தண்ணீரில் சேர்க்க வேண்டும். பிறகு இந்த தண்ணீர் 15 நிமிடத்திற்கு மிதமான தீயில் நன்றாக கொதிக்க வேண்டும்.

3. பின்னர் தண்ணீரில் இருந்து தக்காளி மற்றும் மிளகாயை வடித்தெடுத்து, அவற்றை நன்றாக ஆறவைத்து, தக்காளிப் பழத்தின் மேல் உள்ள தோலை நீக்கிவிட்டு, இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். 

4. பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றி  200 கிராம் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அதன் பின் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இதில் நிச்சயம் தண்ணீர் சேர்க்கக் கூடாது. பிறகு நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

5. இதில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் வற்றி, எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது மீதம் இருக்கும் எண்ணெயை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். இறுதியாக இவை கெட்டியானதும் அடுப்பை அனைத்து விட்டு, நன்றாக ஆறவைத்து, ஒரு கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால், ஒரு மாதம் வரை இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் வைத்து சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.
 

click me!