
கிரகங்களின் இருப்பிடத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றால் சில ராசிகளில் சுப பலன்களும், சில ராசிகளில் அசுப பலன்களும் உண்டாகின்றன. மார்ச் மாதம் துவங்கிவிட்டது.ஜோதிடத்தின் படி, இந்த மாதம் சில ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமாகவும் சில ராசிக்கார்ரகளுக்கு பாதகமாகவும் அமையவுள்ளது.
ஜோதிட கணிப்புகளின் படி, புதன் கிரகம் அனைத்து கிரகங்களிலும் சிறியது. ஒரு மனிதனின் அறிவுக்கும் ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம், வித்யாகாரகன் எனப்படும் புதன் கிரகம் தான். மார்ச் 6, 2022 அன்று, புதன் கிரகம் சனியின் ஜென்ம ராசியான கும்ப ராசியில் பயணிக்க உள்ளது.
இது அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த 5 ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் மார்ச் மாதத்தில் பல வெற்றிகளைப் பெறக்கூடும். அன்னை லட்சுமியின் சிறப்பு அருளும் இவர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் இந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் என்று பார்க்கலாம்.
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வேலை தேடுபவர்கள் பணியிடத்தில் பாராட்டுகளைப் பெற்றால், வணிகர்களிடமிருந்து பெரிய ஆர்டர் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் / மனைவி இடையே அன்பு அதிகமாகும். குழந்தைகளால் நிம்மதி கிடைக்கும். நீண்ட நாள் காத்திருந்த பயணம் நடக்கும். இந்த பயணத்தால் பண ஆதாயம் கிடைக்கக்கூடும். வேறு வேலை மாற்ற நினைத்திருப்பவர்கள் இப்போது அதை செய்யலாம். வேலை மாறுவதற்கு இது நல்ல நேரமாக இருக்கும்.
சிம்மம்:
தொழிலதிபர்களுக்கு மார்ச் மாதம் சிறப்பாக இருக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். சிம்ம ராசிக்காரர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி காதல் விஷயத்திலும் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பல வழிகளில் பணம் வரக்கூடும். இந்த மாதம் முதலீடு செய்வதற்கு ஏற்ற மாதமாக இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு அதிபதி புதன். எனவே, இந்த ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் சிறப்பாக இருக்கும். பணம் சாதகமாக இருக்கும். தொழில் வாழ்க்கையுடன், குடும்பத்திற்காகவும் நேரத்தை ஒதுக்குங்கள். இவர்கள் கடின உழைப்பின் பலனை அடைவார்கள். இதுமட்டுமின்றி, பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். தொழிலதிபர்கள் முன்னேற்றம் அடையலாம். இதுமட்டுமின்றி, மிதுன ராசியில் பிறந்த மாணவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். மார்ச் மாதத்தில் பொருளாதார நிலை மேம்படும்.
துலாம்:
புதன் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். தொழிலுக்கு நல்ல காலம் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எந்த வேலை செய்தாலும் வெற்றி கிடைக்கும். உங்கள் பணி பாராட்டப்படலாம். வியாபாரத்தில் லாபம் கூடும். கடக ராசி மாணவர்கள் படிப்பில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். உங்கள் வாழ்க்கையில் அமைதியான சூழல் நிலவும். அன்னை லட்சுமியின் அருளால் பொருளாதார நிலை மேம்படும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் பலமான பலன்களைத் தரும். பணியிடத்தில் பிரமாதமாக செயல்படுவீர்கள். எதிர்காலத்தில், பதவி உயர்வு-அதிகரிப்பு வடிவில் பயனடையலாம். திடீர் பண ஆதாயம் உண்டாகும்.குறிப்பாக, இவர்களுக்கு வேலை, வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படுவதுடன் பண வரவும் உண்டாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.