
பான் எண் இல்லையா..? வங்கிக்கணக்கு முடக்க ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு .....!!!
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வந்த பின், வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க தற்போது மத்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வங்கியில் டெபாசிட் செய்த தொகை ₹2 லட்சத்துக்கு மேல் இருந்து, அந்த கணக்கில் உள்ள மொத்த தொகை ரூ.5 லட்சத்தை தாண்டியிருந்தால் , பணத்தை எடுப்பதில் சிரமம் ஏற்படும்.
இதற்கு மாற்றாக , சம்மந்தப்பட்ட நபரின் கேஒய்சி (know your costomer ), அதாவது குறிப்பிட்ட நபரின் அனைத்து தேவையான விவரங்கள் அதில் பதிவு செய்யபட்டிருக்கும். இவர்களுக்கு மட்டும் பணம் எடுப்பதில் பிரச்னை இல்லை.
மற்றவர்கள், பான் எண் அல்லது படிவம் 60ஐ நிரப்பி வங்கியில் ஒப்படைத்தால் மட்டுமே, பண பணவரிதனை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, பான் எண் என்பது அனைவருக்கும் ரொம்ப முக்கியமானதாக உள்ளது. மேலும் பான் எண் இணைக்காத வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு , தடை ஏற்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
குறிப்பு: ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்பு, வங்கி கணக்கில் டெபாசிட் செய்த பணத்தை எடுப்பதற்கு தான் இத்தனை கட்டுபாடுகளும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.