ஒரே போடு போட்ட மத்திய அரசு......!!! இனி  மருத்துவர் எந்த காரணமும் சொல்ல முடியாது....!!!

First Published Dec 16, 2016, 1:25 PM IST
Highlights


ஒரே போடு போட்ட மத்திய அரசு......!!! இனி  மருத்துவர் எந்த காரணமும் சொல்ல முடியாது....!!!

என்னடா...... கருப்பு  பண  ஒழிப்பில்  எல்லோருடைய    பங்கும் இருக்கும் போது, மருத்துவம்  மற்றும் கல்வி  துறையை   பொறுத்தவரையில்  வரிவிதிப்பில்  விதி விலக்கு உண்டு......!!!

அதெல்லாம்  சரி,  மருத்துவமனைக்கு   சென்றாலே ,  செலவு  எப்படி  ஆகும்  என  நமக்கு தெரியும்......

இருக்குற பணத்தையெல்லாம் மருத்துவமனையில்    கொடுத்துவிட்டு  தான்  வீடி திரும்ப  முடியும் ...

இந்நிலையில்  கருப்பு  பண  ஒழிப்பு  விவாகரத்தை பொறுத்துவரை , தற்போது அடுத்தகட்டமா, மருத்துவர்கள்  மீது  கண்  வைத்துள்ளது  மத்திய அரசு.....

அதாவது,  அடுத்தாண்டு  ஏப்ரல் மாதம் முதல்,  அனைத்து மருத்துவர்களும் (அரசு  மருத்துவமனை தவிர )  ஸ்வைப்  மெஷின்  மூலமாகத்தான்   பணத்தை  பெற  முடியும்.மேலும்  அவ்வாறு  பயன்படுத்தாத  மருத்துவர்களின்  அங்கிகாரம்  ரத்து  செய்யப்படும்  என்றும்,  மத்திய   வருவாய்  துறை  எச்சரிக்கை  விடுத்துள்ளது.

மேலும் இது குறித்து  இந்திய  மருத்துவ   கவுன்சிலுக்கு, மத்திய  சுகாதாரத்துறை எழுதிய  கடிதத்தில் ........

மருத்துவமனை :

தனியார் மருத்துவர்கள்,தங்களுடைய ஊழியர்களுக்கு ஆன்லைன் மூலமாகத்தான் மாத ஊதியத்தை அளிக்க வேண்டும் எனவும் பத்துக்கு மேற்பட்ட ஊழியர்களை கொண்டுள்ள மருத்துவர்கள்,தொழிலாளர் கமிஷனிடம் அது குறித்த தகவல்களை அளிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்தகங்கள் !

மருந்தகங்களை  பொறுத்தவரையில், 5,000  ரூபாய்க்கு  மேல்,  மருந்து வாங்கினால்  ஸ்வைப் இயந்திரன்  மூலமாகத்தான்  பணம்   பெற  வேண்டும் என்பது  குறிப்பிடத்தக்கது.

இப்ப  மருத்துவ  கவுன்சில்  என்ன  செய்ய உள்ளது...?

ஸ்வைப் இயந்திர பயன்பாடு குறித்த அறிவிப்பை,அனைத்து தனியார் மருத்துவர்களுக்கும் மருத்துவ கவுன்சில் அனுப்ப உள்ளது….

ஸ்வைப் இயந்திரங்களை மருத்துவர்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய,வங்கிகளின் சான்றிதழும் தனியார் மருத்துவர்களிடம் கேட்டுப்பெறப்படும்  என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எது எப்படியோ,  இனி  மருத்துவர்களும்   கருப்பு  பணம்  பதுக்கவே  முடியாது  என்பதில்  எந்த மாற்றமும்  இல்லை ........!!!

 

 

 

  

 

 

 

 

 

click me!