22ம் தேதி பால் சப்ளை அதிகாலை மட்டுமே..!! பால் முகவர் சங்கம் அறிவிப்பு..!!

By Thiraviaraj RMFirst Published Mar 20, 2020, 7:38 PM IST
Highlights

பிரதமர் மோடி 22ம்தேதி மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால்,தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1.5 லட்சம் பால் முகவர்களும் வரும் 22-ந் தேதி காலை 7.00 மணிக்கு மேல் முற்றிலுமாக பால் விநியோகத்தில் ஈடுபடப்போவதில்லை என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
 
T.Balamurugan

கொரோனா வைரஸ் பரவலை தடுத்திட சுய ஊரடங்கு மக்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க  மக்களை தன்னார்வத்தோடு தனிமைப்படுத்திட மத்திய அரசு எடுக்கும் நல்லெண்ண நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1.5 லட்சம் பால் முகவர்களும் வரும் 22-ந் தேதி காலை 7.00 மணிக்கு மேல் முற்றிலுமாக பால் விநியோகத்தில் ஈடுபடப்போவதில்லை என்கிற முடிவை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அத்தியாவசிய உணவுப்பொருளாக விளங்கும் பால் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கிடைத்திட ஏதுவாக தமிழகம் முழுவதும் 21-ந் தேதி சனிக்கிழமையன்று காலை, மாலை என இருவேளைகளில் கூடுதலாக பால் கொள்முதல் செய்து அன்றைய தினம் இரவு கூடுதல் நேரமும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணி முதல் காலை 6.30 மணி வரையிலும் பால் விநியோகம் செய்திடும் பணியை பால் முகவர்கள் மேற்கொள்வார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிவித்திருக்கிறார் தலைவர் பொன்னுச்சாமி.

click me!