சினிமாகாரர்களுக்கு "கட் அவுட்" வைக்கும் முட்டாள் இளைஞர்களே..! "சீனா கட் அவுட்"-களை பாருங்க..!

By ezhil mozhiFirst Published Mar 20, 2020, 4:39 PM IST
Highlights

சீனாவில் கொரோனா  வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட இடத்தில் மருத்துவர்களும் செவிலியர்களும்  தங்கி  மக்களுக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். 

சினிமாகாரர்களுக்கு "கட் அவுட்" வைக்கும் முட்டாள் இளைஞர்களே..! "சீனா கட் அவுட்"-களை பாருங்க..! 

சினிமா காரர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் மட்டும் கட் அவுட் வைத்து  பழகுன நம் மக்களுக்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அளித்து வீடு திரும்பிய மருத்துவர்களுக்கும்  செவிலியர்களுக்கும் பிரமாண்ட கட் அவுட் வைத்து வரவேற்பு கொடுத்து உள்ள சீனாவை பார்க்கும் போது  ஆச்சர்யமாக தான் இருக்கும் 

சீனாவில் கொரோனா  வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட இடத்தில் மருத்துவர்களும் செவிலியர்களும்  தங்கி  மக்களுக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சீனாவில் தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதால், அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆயத்தமாகி வருகின்றனர் 

அவர்களை கௌரவிக்கும் விதமாக 18 நகரங்களில், 50 ஆயிரம் பிரம்மாண்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு வரவேற்கப்பட்டன. முக்கிய கட்டிடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட திரைகளில் மருத்துவர்களின் புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது 

கடந்த 2 மாத காலமாகவே, தங்கள் வீட்டை விட்டு பிரிந்து மருத்துவமனையிலேயே தங்கியும், மற்றவர்களுக்கு தங்கள் மூலமாக கொரோனா பரவாமல் தடுக்க உடல் முழுவதும் பாதுகாப்பு கவசம் அணிந்து  பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்த செவிலியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் எவ்வளவு  நன்றி தெரிவித்தாலும் ஈடு செய்ய முடியாது...

காரணம்.... தொடர்ந்து கண் விழித்திருந்து, சரியான நேரத்தில் சாப்பிட கூட முடியாமல் குடும்ப உறுப்பினர்களையும் சந்திக்க முடியாமல் எப்போது வேண்டுமானாலும் தம்மையும் கொரோனா தாக்கலாம்  என்பது தெரிந்தும் கூட தன்  உயிரையும் பொருட்படுத்தாது.... பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் முயற்சியில் மட்டுமே ஈடுபாட்டோடு சேவை செய்த மருத்துவர்களும் செவிலியர்களும் மற்ற மருத்துவ ஊழியர்களும் வாழும் கடவுளே....

இப்படி உயிர் காக்கும் சேவையில் ஈடுபட்டு வெற்றி கண்டவர்களின் உன்னதத்தை அறிந்தவர்கள் மட்டுமே...அவர்களை கௌரவப்படுத்த முடியும். அதில் சீனா வெற்றி கண்டது.

ஆனால்.. அப்படியே இந்தியா பக்கம் திரும்பி பார்த்தால், குறிப்பாக தமிழகத்தை நினைத்தால் நமக்கெல்லாம்  என்ன தோன்றும்.. பெரும் அரசியல் வாதிகளுக்கு பிரமாண்ட கட் அவுட் வைப்பதும், அதே கட்அவுட் கீழே விழுந்து 4 பேரின் உயிரையாவது பலி வாங்குவதையும், சினிமா பிரபலங்களுக்கு கட் அவுட் வைப்பதும் ரசிகர்களிடேசியே மோதல் ஏற்பட்டு  வெட்டு  குத்து  என  வழக்காவதும்  தானே  நமக்கெல்லாம்  தெரியும்.....

ஆனால் உண்மையில்  தன்  உயிரையும்  பொருட்படுத்தாது....  மக்களுக்காகவே  சேவை செய்த  மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மற்ற மருத்துவ ஊழியர்களை கூட இப்படி கட் அவுட் வைத்து கௌரவப்படுத்த முடியும் என்பதை சீனாவை பார்த்தும் நாம் தெரிந்துக்கொள்ள வில்லை என்றால், கொரோனாவை விட மிக மோசமான வைரஸ் தான் நம் சிந்தையை தாக்கி உள்ளது என  உணர்ந்துகொள்ளலாம்.
 

click me!