2022ம் ஆண்டு முடிய 60 நாட்கள் தான் இருக்கு, ஆனா ? மீண்டும் சுனாமி.. நாஸ்டர்டாமஸ் கணிப்பு பகீர்

By Raghupati RFirst Published Nov 6, 2022, 3:32 PM IST
Highlights

பிரான்சின் பிரபல ஜோதிடரான நாஸ்டர்டாமஸை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். உலகத்தைப் பற்றிய அவரது கணிப்புகள் பிரபலமானவை ஆகும். அவர் கணித்த கணிப்புகள் பல உண்மையாக நடந்துள்ளது. தற்போது 2022ஆம் ஆண்டு குறித்த அவரது கணிப்பு வெளியாகியுள்ளது.

நாஸ்ட்ராடாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பே 2022 ஆம் ஆண்டின் பணவீக்கத்தையும் கணித்திருந்தார். நாஸ்டர்டாமஸ் கணிப்பில், இந்த ஆண்டு பணவீக்கம் கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. இது தவிர அமெரிக்க டாலரின் மதிப்பும் கடுமையாக வீழ்ச்சியடையும் என கூறப்பட்டுள்ளது. இதனுடன், 2022ம் ஆண்டில், மக்கள் தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயினில் அதிக பணத்தை முதலீடு செய்வார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில், சிறுகோள் பூமிக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. ஒரு பெரிய பாறை கடலில் விழும் என்றும், அதன் காரணமாக கடுமையான அலைகள் எழுந்து பூமியை எல்லா பக்கங்களிலிருந்தும் சூழ்ந்து கொள்ளும் என்று நாஸ்ட்ராடாமஸ் கூறியுள்ளார். கடல் நீர் பூமிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க..இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு !

2022 ஆம் ஆண்டில், செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தை கட்டுப்படுத்தும் என்றும் தனிப்பட்ட கணினியின் மூளை மனிதர்களைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார். மேலும் ரோபோக்கள் மனித இனத்தின் மீது தாக்குதக் என்றும் கணித்துள்ளார்.2002ல் ஏற்பட்டது போல மிகப்பெரிய அளவில் உலக நாடுகளில் பண வீக்கம் ஏற்படும். இதனால் பஞ்சம் ஏற்படும். அமெரிக்க டாலரின் மதிப்பு அதலபாதாளத்திற்கு செல்லும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் பிரான்ஸ் நாட்டில் மிகப்பெரிய புயல், வெள்ளம் ஏற்படும். இதனால் எதிர்பாராத அழிவு ஏற்படும் என கூறி உள்ளார். அதுபோல் இந்த் ஆண்டிற்கான அடுத்த 60 நாட்களுக்கு பெரிய ஆபத்துகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த ஆண்டு அணு ஆயுதம் வெடிக்கும் என்று நாஸ்ட்ர்டாமஸ் தனது கணிப்பில் கூறியது குறித்து கவலை ஏற்படுத்தி உள்ளது.

அணு ஆயுத போர் வேற்பட்டால் நிலைமையில் கடும் மாற்றம் ஏற்படும். புவி வெப்பமயமாதலால் பூமியும் மில்லியன் கணக்கான மக்களும் பாதிக்கப்படுவார்கள். இது நடந்தால், கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு பஞ்சம் ஏற்படும் என்று கண்டித்துள்ளார் நாஸ்டர்டாமஸ்.

இதையும் படிங்க..பாஜகவுக்கு தாவும் எடப்பாடி அணி.. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஊழல் பின்னணி.! பற்ற வைத்த ஓபிஎஸ் டீம் !!

இதையும் படிங்க..கோவை கார் வெடிப்பில் சிக்கிய பென் டிரைவ்.. 100க்கும் மேற்பட்ட ஐஎஸ் அமைப்பு வீடியோக்கள் - பரபரப்பு பின்னணி !

click me!