2022ஆம் ஆண்டின் முழு சந்திர கிரகணம் வரும் நவம்பர் மாதத்தில் நிகழவுள்ளது.
வரும் நவம்பர் 8 ஆம் தேதி இந்த ஆண்டின் முழு சந்திர கிரகணம் வானில் ஏற்பட இருக்கிறது. 35 நாட்களுக்குள் நிகழும் 2 வது கிரகணமாக இது பார்க்கப்படுகிறது.முழு சந்திர கிரகணம் என்பது பூமியுடைய நிழலின் இருண்ட பகுதிக்குள் முழு சந்திரனும் வரும் நிகழ்வு.
அம்ப்ரா என்று அழைக்கப்படும் இந்த சந்திர கிரணத்தின் விளைவாக சந்திரன் ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முழு சந்திர கிரகணத்தை ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளிலும், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, பசிபில் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல் பகுதிகளிலும் காண முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க..Viral Video: எங்க வீட்டுக்கு போகணும், நான் வரமாட்டேன்.! திருமணத்திற்கு பிறகு கணவருடன் செல்ல மறுத்த பெண் !!
இந்தியாவில் முழு சந்திர கிரகணம் கிழக்கு பகுதிகளிலிருந்து மட்டுமே தெரியும். பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால், அது சந்திர கிரகணம் என்றும், நிலவின் நிழல் சூரியனை மறைத்தால், அது சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. வரும் நவம்பர் 8ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. சந்திரன் பூமியின் நிழலின் அம்ப்ரா எனப்படும் இருண்ட பகுதிக்குள் விழுகிறது.
இது நிகழும்போது சந்திரன் ரத்த சிவப்பு நிறமாக மாறும். நாசாவின் தகவல் படி, முழு சந்திர கிரகணம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஏற்படாது என தெரிவித்துள்ளது. இது குறித்து நாசா தனது டுவிட்டர் பக்கத்தில், நவம்பர் 8, 2022 அன்று, சந்திரன் பூமியின் நிழலுக்குச் சென்று சிவப்பு நிறமாக மாறும். அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த முழு சந்திர கிரகணம் ஏற்படாது’ என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க..தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி.. ஆனால் அந்த 6 இடங்களில் அனுமதி இல்லை!
இதையும் படிங்க..19 வயது பையனை திருமணம் செய்யும் 56 வயது பெண்.. அடேங்கப்பா.! இப்படியொரு காதல் ஜோடியா.!!