கடவுளே எந்த மகனுக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது.. உயிரிழந்த தாயின் சடலத்தை டூவீலரில் எடுத்து சென்ற அவலம்

By vinoth kumarFirst Published Apr 28, 2021, 10:53 AM IST
Highlights

உடல்நலக்குறைவால் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை கொரோனா அச்சத்தால் ஆம்புலன்சில் கொண்டு செல்ல ஓட்டுநர்கள் மறுத்துவிட்டதால் அவரது மகன் இருசக்கர வாகனத்தில் நண்பர் உதவியுடன் கொண்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

உடல்நலக்குறைவால் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை கொரோனா அச்சத்தால் ஆம்புலன்சில் கொண்டு செல்ல ஓட்டுநர்கள் மறுத்துவிட்டதால் அவரது மகன் இருசக்கர வாகனத்தில் நண்பர் உதவியுடன் கொண்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் கில்லோய் கிராமத்தை சேர்ந்தவர் செஞ்சுலம்மா(50). இவர் நேற்று முன்தினம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கினார். இதனால் அவரது மகன், தனது நண்பரின் உதவியுடன் தனது தாயை இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்துக்கொண்டு, பலாசாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். 

அங்கு பரிசோதனை செய்த  மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடலை தனது சொந்த ஊரான கில்லோய் கிராமத்திற்கு கொண்டு செல்ல, அங்கிருந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அவரது மகன் அழைத்தார். ஆனால், அவர்கள் கொரோனா அச்சம் காரணமாக சடலத்தை கொண்டு செல்ல முன்வரவில்லை. தனது தாய்க்கு கொரோனா இல்லை எனக்கூறி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் மகன் கெஞ்சியுள்ளார். ஆனால், அவர்கள் சடலத்தை ஆம்புலன்சில் கொண்டு செல்ல ஒப்புக்கொள்ளவில்லை. 

இதனால் செய்வதறியாமல் திகைத்த மகன், தனது நண்பரை பைக் ஓட்டும்படி கூறிவிட்டு பைக்கிலேயே தனது தாயின் சடலத்தை உட்கார்ந்த நிலையில் வைத்துக் கொண்டு தாயின் சடலத்திற்கு மாஸ்க் அணிவித்து சொந்த ஊருக்கு கொண்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

click me!