அட பாவமே..! போட்டோ ஷூட்டிங்கில் நதியில் விழுந்த புதுமண தம்பதி ..! அடுத்து நடந்த சோக வீடியோவை பாருங்க..!

Published : Apr 19, 2019, 03:17 PM IST
அட பாவமே..! போட்டோ ஷூட்டிங்கில் நதியில் விழுந்த புதுமண தம்பதி ..! அடுத்து நடந்த சோக வீடியோவை பாருங்க..!

சுருக்கம்

திருமணம் முடிந்து விதவிதமாக போட்டோ எடுக்க பல்வேறு இடங்களுக்கு புதுமண தம்பதிகளை அழைத்துச் செல்கின்றனர் போட்டோகிராபர்.  

திருமணம் முடிந்து விதவிதமாக போட்டோ எடுக்க பல்வேறு இடங்களுக்கு புதுமண தம்பதிகளை அழைத்துச் செல்கின்றனர் போட்டோகிராபர்.  இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் படங்களில் வரும் கதாநாயகன் கதாநாயகி போலவே ஆடல் பாடல் என அனைத்தையும் நிஜவாழ்க்கையில் சாதாரண மனிதர்களும் அவர்களது திருமணத்தின் போது எடுக்கப்படும் போட்டோஸ் வீடியோஸ் வைத்தே நிறைவேற்றிக்கொள்கின்றனர் என்பதை உணர முடியும்.

இந்த நிலையில், தற்போது கேரள மாநிலத்தில் திருமணம் முடிந்து சில நாட்களே ஆன புதுமண தம்பதிகளை அழைத்துக்கொண்டு போட்டோகிராஃபர் பம்பை நதிக்கு சென்றுள்ளார். அங்கு டோனி ஒன்றில் தம்பதிகளை அமரவைத்து விட்டு அவர்கள் இருவரும் ஒரு இலையை தன் தலைமீது பிடித்தவாறு போட்டோ ஷூட் செய்து வந்துள்ளனர். 

அப்போது  எதிர்பாராத விதமாக தோனி சற்று நிலைதடுமாறி உள்ளது. அதில் மணமக்கள் இருவரும் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்த இந்த காட்சியை சக தோணிகளில் அருகருகே பயணித்தவர்கள் தங்களது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது வைரலாக பரவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுமண தம்பதிகள் பல வித்தியாசமான கோணங்களில் பல வித்தியாசமான இடங்களில் போட்டோ வீடியோ எடுக்க ஆசைப்படுவது வழக்கம் தான். அதேவேளையில் போட்டோகிராபரும் உயிருக்கு ஆபத்தில்லாத அளவிற்கு ஓரளவுக்கு ரிஸ்க் எடுப்பது சரி ஆனால் இது போன்ற நதிக்கரையில் ஏனோ தானோ என செயல்படுவது சரியானது அல்ல. இந்த ஒரு நிகழ்வு இனிவரும் புதுமண தம்பதிகளுக்கு ஒரு பாடமாக அமையும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!