சுற்றுலா பயணிகளே... குளு குளுன்னு இருக்க கும்பக்கரை அருவிக்கு போங்க..!

By ezhil mozhi  |  First Published Apr 19, 2019, 2:28 PM IST

சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பித்து கொள்ள பொதுமக்கள் குளிர்ச்சியான பல இடங்களில் தேடி அலைகின்றனர். 


சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பித்து கொள்ள பொதுமக்கள் குளிர்ச்சியான பல இடங்களில் தேடி அலைகின்றனர். பொதுவாகவே  கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள கோடை விடுமுறையில் ஊட்டி கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம். 

அந்த வகையில் தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மழை பெய்து இருப்பதால் பெரியகுளம் என்ற பகுதி அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

கடந்த பல நாட்களாக தொடர்ந்து மழை இல்லாததால் இந்த அருவியை வறண்டு காணப்பட்டது. இதனையடுத்து கடந்த மாதம் கும்பக்கரை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அருவிக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது. இதன் காரணமாக கோடை விடுமுறையில் சுற்றுலா செல்ல கொடைக்கானல் வந்திருக்கும் பயணிகள் கும்பக்கரை அருவிக்கு சென்று அங்கு குளித்து மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

மேலும் கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

click me!