பிறந்த குழந்தைக்கு “ஜிஎஸ்டி”..!  ராஜஸ்தானில் நடந்த வியப்பூட்டும் நிகழ்ச்சி..

 
Published : Jul 03, 2017, 02:37 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
பிறந்த குழந்தைக்கு “ஜிஎஸ்டி”..!  ராஜஸ்தானில் நடந்த வியப்பூட்டும் நிகழ்ச்சி..

சுருக்கம்

newborn babe named as gst in rajasthan

சமீப காலமாக வாய் நிறைய உச்சரித்த ஒரு வார்த்தை எது என கேட்டால் அது ஜிஎஸ்டி யாக தான் இருக்க முடியும். பல வருடங்களுக்கு பின், ஜிஎஸ்டி என்றழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் ஒரே சீராக ஜூலை1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வரவிருந்ததையொட்டி,  நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 30-ஆம் தேதி நள்ளிரவு நடந்த சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியது.

இதனை  தொடர்ந்து நாடே ஜிஎஸ்டி பற்றி பெரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்த சமயத்தில், ஒரு சுவாரஸ்யம் நடந்துள்ளது. அதாவது ஜிஎஸ்டி அறிமுகமான அதே நேரத்தில், ராஜஸ்தான் மாநிலம் பீவா பகுதியை சேர்ந்த  தம்பதியினருக்கு  நள்ளிரவு சரியாக 12.02 மணிக்கு குழந்தை பிறந்தது. மகிழ்ச்சி  வெள்ளத்தில்  இருந்த தம்பதியினரிடம் அருகில் இருந்தவர்கள்,   ஜிஎஸ்டியும், குழந்தையும் ஒரே நேரத்தில் அறிமுகமாகி உள்ளது என சக மக்கள் கிண்டலடிக்க,”ஜிஎஸ்டி” என்பதையே தங்கள் குழந்தைக்கு பெயராக வைத்து  அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர் அந்த தம்பதியினர் 

இந்த தகவலை அறிந்த ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, தனது டுவிட்டர் பதிவில், "ஜி.எஸ்.டி குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டு,தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்