
இன்று நமது உணவு முறைகள் மாறி விட்டன. நமது முன்னோர் சாப்பிட்ட பழைய சோறு, வெங்காயம் காம்பினேஷன்தான் இன்றளவும் அவர்களை திடகாத்திரமாக வைத்திருக்கிறது. துரித உணவு சாப்பிட்டு வரும் இன்றைய இப்போதைய தலைமுறை, 30வயதிலேயே சர்க்கரை, இதய நோய்களால் பாதிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. ஆகவே, பழைய சோறு சாப்பிடுவதை இனி வழக்கமாக்கிக் கொண்டால் ஆரோக்கியம் நம்மை தேடி வரும். பழைய சோறு என்றால் கேவலமாக நினைக்கும் நாம், அதிலுள்ள நன்மைகள் குறித்து அறிந்து
கொண்டால், நிச்சயம் அதை தவிர்க்க மாட்டோம்.
பழைய சோற்றில் தான், வைட்டமின் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிர, சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கணக்கிலடங்கா இருக்கின்ற. இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால், அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. காலை உணவாக பழைய சாதத்தை உண்டால், உடல் லேசாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
சோற்றில் இரவிலே தண்ணீர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால், உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவை குணமாகும். அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகி விடுகிறது. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குணமாகிவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக, நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால், எந்த நோயும் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.