கண்கள் கவர்ச்சியாக இருக்க என்ன செய்யலாம்?

 
Published : Jun 27, 2017, 07:23 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
கண்கள் கவர்ச்சியாக இருக்க என்ன செய்யலாம்?

சுருக்கம்

how to make sexy eyes

முகத்துக்கு பெரும்பாலும் அழகு சேர்ப்பது, பளிச் என்ற கண்கள். நாம், மற்றவரிடம் பேசும் போது கூட, கண்களை பார்த்து தான் பேசுகிறோம். காதலார் கூட காதலியின் கண்  கண்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, சில பயிற்சிகள் உள்ளன. அதை பின்பற்றினால், ஆரோக்கியத்துக்கு வித்திடும்.

கண்களை சுற்றி கருவளையம் இருந்து சோர்வடைந்து இருந்தால், இந்த வழிமுறைகளை பின்பற்றலாம். உங்கள் கண்களை மூடிக்கொண்டு மேலும் கீழுமாக சுழற்றி, பின், இமைகளை அகல விரித்துப் பாருங்கள். 
தொடர்ந்து செய்வதன் மூலம் கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

மேலும், உள்ளங்கைகளை நன்றாகதேய்த்து, கண்களில் ஒற்றி எடுக்கவும். இது, கண்களை சுற்றியுள்ள ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
வெள்ளரிக்காயை, சிறு துண்டுகளாக நறுக்கி, கண்களின் மேல் வைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு எடுத்து, தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கருவளையும், விரைவில் அகலும்.

பன்னீரை பஞ்சில் நனைத்து, கண்களை மூடி அதன் மேல் வைக்க வேண்டும். 15 நிமிடங்களுக்குப் பிறகு எடுக்க வேண்டும். 
ஒரு நாளுக்கு, இரண்டு அல்லது முன்று முறை கண்களை நீர் விட்டு கழுவ வேண்டும். இது, கண்கள் ஈரப்பதத்துடன் இருக்க உதவும். கம்ப்யூட்டரை நீண்ட நேரம் பார்த்து பணிபுரிகிறீர்கள் என்றால், கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் கண்கள் வறண்டு விடும். கண்கள் வறண்டுவிட்டால் தூக்கமின்மை பிரச்னை ஏற்படும். மன அழுத்தம், மலச் சிக்கல் போன்றவை ஏற்படும். 


குறைந்தபட்சம், 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, கம்ப்யூட்டரில் இருந்து பார்வையை திருப்பி, வேறெங்கேனும் கண்களை உலவ விடலாம்.
எனவே, தூக்கம் கெடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தூக்கத்தை தவிர்த்து விட்டால், உடல் நலனும் கெட்டு, கருவளையம் வந்து, முகத்தையும் சோர்வாக்கும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்