
சில குழந்தைகள் பிறக்கும் போது நீல நிறத்தில் காணப்படுகின்றன. முன்பு நீல நிறத்தில் காணப்படுகின்றன. முன்பு நீல நிறத்தில் குழந்தைகள் பிறந்தால் அது அதிர்ஷ்டம் என்ற மூடநம்பிக்கை நிலவி வந்தது. ஆனால் குழந்தைகள் நீல நிறத்தில் பிறப்பதற்கு இதயத்தில் உள்ள குறைபாடே காரணமாகும்.இந்த நோயை அமெரிக்க இதய நிபுணரான ஹெலன் ப்ருக் என்பவர் கண்டுபிடித்தார்.
இக்குறைபாடுள்ள குழந்தைகளின் இதயத்திலுள்ள வென்ட்ரிக்கிள் பகுதியில் பாதிப்பு இருக்கும். இக்குறைபாட்டை வென்ட்ரிக்கிள் ஸப்டேல் டிபெக்டல் என்று அழைப்பர். நமது உடலில் ஓடும் ரத்தம் இதயத்தின் வலது வென்ட்ரிக்கிள் வழியாக நுரையீரலில் பாய்ந்து நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை ஏற்றுக்கொண்டு ஆக்ஸிகரணம் அடைந்து சுத்த ரத்தமாக மாறுகிறது. இந்த சுத்த ரத்தம் சிவப்பு நிறத்தில் காணப்படும்.
ஆக்ஸிகரணமடைந்த ரத்தம் பிறகு இடது வென்ட்ரிக்கிள் வழியாக உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த பாதிப்புள்ள குழந்தைகளுக்கு அசுத்த ரத்ததமானது, நுரையீரல் பகுதியை அடையாமல் நேரடியாக இடது வென்ட்ரிக்கிள் வழியாக உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பபடுகிறது. அசுத்த ரத்தம் நீல நிறத்தில் காணப்படும். இந்த ரத்தம் உடலில் ஓடுவதாலேயே அக்குழந்தைகள் நீல நிறத்தில் காணப்படும். இது தவிர நைட்ரேட் அதிகம் கலந்துள்ள பால், நீர், போன்றவற்றை அருந்துவதாலும் குழந்தைகள் நீல நிறமாக மாறிவிடும். காரணம் இந்த நைட்ரேட், ஆக்சிஜனைச் சுமந்து செல்லும் ரத்தத்தின் ஹெமூகுலோபினின் ஆற்றலைக் குறைத்துவிடுகிறது. எனவே ரத்தம் நீல நிறமாக மாறிவிடுகிறது. பெரியவர்களுக்கு இந்தப் பாதிப்பு சற்று குறைவாகவே இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.