மன அழுத்தமா நடக்க துவங்குங்கள்..

 
Published : Jul 01, 2017, 04:06 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
மன அழுத்தமா நடக்க துவங்குங்கள்..

சுருக்கம்

Are you in depression lets start walking

இன்றைய பரபரப்பான கால கட்டத்தில், அனைவரும் ஏதோ ஒரு சூழலில் மன அழுத்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். பணிச்சூழல், வீட்டில் ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றால், மன அழுத்தம் தாக்குவதால், பலரும் தவிக்கிறார்கள்.

இதனால் அவர்களது வாழ்வில் பல பிரச்சனையை சந்திக்கிறார்கள், நடத்தை கோளாறு, தூக்கமின்மை, மனச் சிதைவு நோய், மன அழுத்தம்  போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

 உளவியல் வல்லுனர்கள் கூறுவது என்ன? 

சூழ்நிலைகள் பதட்டம் காரணமாக, சில தவறான முடிவுகளை எடுக்கக் தோன்றும். அந்த நேர பதட்டத்தில், எது தவறு, எது சரி என்று சிந்திக்காமல் செயல்படுவது, பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, மனம் பதட்டமாக இருக்கும்போது முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுங்கள். பத்து வரை மனதுக் குள்ளேயே எண்ணி விட்டு, சிறிது தூரம் உலவி விட்டு, பதட்டம் தணியும் வரை பொறுமையாய் இருந்தால், ஆக்கபூர்வமான முடிவுகள் கிடைக்கும். 


எதையும் எளிதாக செய்ய முடியும் என்ற, தன்னம்பிக்கை இருந்தாலும் கூடுதல் பாரங்கள், மன அழுத்தத்தை வளர்த்து விடும்.

எல்லோரையும் திருப்திப்படுத்துவது இயலாத காரியம் என்பதால், செய்ய முடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையும், நாசூக்காக மறுத்து விடுவது நல்லது. 

அமைதியான இடத்தில் அமர்ந்து, கற்பனையாய் சிந்திப்பது பலனளிக்கும் என்கின்றனர் மன நல ஆராய்ச்சியாளர்கள்.

 தேங்கிக் கிடக்கும் உணர்வுகளை தட்டி எழுப்பும் சக்தி, திறந்தவெளிக்கு உண்டு. அறைக்குள் முடங்கிக் கிடக்காமல், இருப்பது நல்லது.

வைட்டமின் பி, மற்றும் கால்சியம் அடங்கிய சத்துள்ள உணவுகளை உண்பவர்கள், எளிதாக மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கார்போஹைட்ரேட் கொண்ட நொறுக்குத் தீனியை தின்றால், அதிலுள்ள செரிடானின், உங்கள் மனதை அமைதிப்படுத்தும்.

நெஞ்சில் ஏதாவது எண்ணங்கள் கனக்கத் தொடங்கிவிட்டால், கொஞ்ச தூரம் நடந்து செல்வது பயன்தரும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

மனதில் தோன்றும் கவலைகள், எல்லா நேரமும் உங்களை அரித்தெடுப்பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார்க்க, நேரம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் கவலைகளை ஆராய்ந்து, அதற்கு தீர்வு கண்டறிய வேண்டும். அப்போதெல்லாம், ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு, அதில் முழு கவனத்தை செலுத்துங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதையும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்