Subhas Chandra Bose birth anniversary: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்வும் வரலாறும்

By SG BalanFirst Published Jan 23, 2023, 10:44 AM IST
Highlights

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் தன்னிகரற்ற தலைவராக வாழ்ந்த அவரது வாழ்க்கை வரலாற்றை நினைவுகூர்வோம்.

ஒடிஸா மாநிலம் கட்டாக்கில்  1987ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி  பிறந்தார் சுபாஷ் சந்திர போஸ். இவரது தந்தை ஜானகிநாத் போஸ் வழி முன்னோர்கள் 27 தலைமுறைகளாக, வங்க மன்னர்களின் ஆட்சியில் முக்கியப் பதவிகளில் இருந்தனர். போஸின் தாயார் பிரபாவதி தேவியும் பிரபு குலத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு 9வது குழந்தையாகப் பிறந்தார் போஸ். பாப்டிஸ்ட் மிஷன் பள்ளியில் ஆரம்பக் கல்வி படித்துவிட்டு, உயர் கல்வியை கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் மேற்கொண்டார்.

16 வயதில் வீட்டை விட்டு வெளியேறி தன் ஆன்மிக குருவைத் தேடிச் சென்றார். தனக்கான குரு கிடைக்காததால் தந்தைக்கு வாக்களித்தபடி 1915ஆம் ஆண்டில் கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். அங்கு இருந்த ஆசிரியர் ஒருவர் இனவெறியுடன் நடந்துகொண்டதற்கு எதிராக குரல் கொடுத்தார். இதனால் சுபாஷ் சந்திர போஸும் அவரது நண்பர்களும் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டு, 2 வருடம் வேறு கல்லூரிகளிலும் படிக்க இயலாதபடி தடை விதிக்கப்பட்டது. பின்னர், சி. ஆர். தாஸ் உதவியால் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் படித்தார்.

பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்: தலைமை நீதிபதிக்கு பிரதமர் மோடி பதில்

ஐ.சி.எஸ். பட்டம் பெற்றாலும் ஆங்கிலேயனிடம் வேலை பார்க்கக் கூடாது என்ற கொள்கையுடன் அந்தப் பதவியைத் துறந்தார். லண்டனிலிருந்து திரும்பிய போஸின் ஆற்றலை நன்கு உணர்ந்த சி. ஆர். தாஸ். தனது தேசியக் கல்லூரிக்கு போஸை தலைவராக நியமித்தார். அப்போது சுபாஷ் சந்திர போஸ் 25 வயதே நிரம்பிய இளைஞர். கல்லூரியில் மாணவர்கள் முன் பேசும்போது எல்லாம் சுதந்திர தாகத்தைத் தூண்டும் வகையில் பேசுவார்.

1919ஆம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடத்திய ஜெனரல் டயரை உத்தம் சிங் சுட்டுக் கொன்றார். இதனை காந்தியடிகள் கண்டித்தார். ஆனால், சுபாஷ் சந்திர போஸ் உத்தம் சிங்கைப் பாராட்டி எழுதினார். நேதாஜி கொல்கத்தா மாநகராட்சி நிர்வாக அதிகாரியாகவும் போஸ் பணிபுரிந்தார்.  அப்போது இவருக்கு மக்கள் ஆதரவு பெருகுவதை கவனித்த பிரிட்டிஷ் அரசு இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில் இருந்தபடியே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  இருந்தாலும் சிறையில் இருந்த காலத்தில் அவரது உடல்நலம் குன்றியது. சிறையிலிருந்து வெளிவந்து உடல்நிலை தேறியதும் 1930ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, இந்தியா சுதந்திரம் பெற அந்த நாடுகளின் ஆதரவைக் கோரினார்.

ஒரு ஓட்டுக்கு ரூ.6,000 என்ற கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர்... மறுப்பு தெரிவித்த கட்சி!!

1941ஆம் ஆண்டு ‘சுதந்திர இந்தியா மையம்’ என்ற அமைப்பை நிறுவினார். ‘ஆசாத் ஹிந்த்’ என்ற வானொலி நிலையத்தை ஏற்படுத்தினார். சுதந்திர இந்தியாவுக்கான தனிக் கொடியையும் உருவாக்கினார். ‘ஜனகணமன’ பாடலை இந்திய தேசிய கீதமாக அறிவித்ததும் சுபாஷ் சந்திர போஸ்தான். இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தி, அதில் ஜான்சி ராணி பெயரில் பெண்கள் பிரிவையும் உண்டாக்கினார்.

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி நேதாஜி விமான விபத்தில் இறந்தார் என்று ஜப்பான் அரசு அறிவித்தது. ஆனால், இதனை மறுக்கும் முரண்பட்ட கருத்துகளும் நிலவுகின்றன. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தனிப்பெரும் வீர்ராக விளங்கிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணம் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் மரணத்தின் பின்னணி என்ன?

click me!