
உடலில் சளி அதிகமாக தேங்கும் போது, மூச்சு திணறல், தொண்டை கமறல், இருமல் மற்றும் கபம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்தச் சளியை நீக்க இயற்கையான மருத்துவக் கஷாயங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு எந்த விதமான பக்கவிளைவுகளும் ஏற்படாமல் எளிதில் சளி தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும். சளியை அகற்ற உதவும் சில இயற்கை கஷாயங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து விரிவாக காணலாம்.
நுரையீரல் சளியை நீக்க வழிகள் :
1. வெந்தயம், மஞ்சள் கஷாயம் :
வெந்தயம் மற்றும் மஞ்சள் இரண்டும் உடலின் உட்பகுதியை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை.
தேவையான பொருட்கள்:
1 டீஸ்பூன் வெந்தயம்
1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
1/2 டீஸ்பூன் சுக்கு தூள்
1/2 டீஸ்பூன் கருப்பட்டி
1 கப் நீர்
செய்முறை:
* நீரை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
* அதில் வெந்தயம், மஞ்சள்தூள், சுக்கு தூள், கருப்பட்டி சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
* 5 நிமிடங்கள் கழித்து வடிகட்டி, சூடாக பருகவும்.
பயன்கள்:
* இந்தக் கஷாயம் சளியை எளிதில் வெளியேற்றும்.
* சளி தேங்குவதை குறைத்து, உடல் சுத்தமாகும்.
* கருப்பட்டி உடலில் தேங்கிய சளியை வெளியேற்றவும், உடல் சூட்டினை சமநிலைப்படுத்தவும் உதவும்.
2. துளசி, மிளகு, சுக்கு, தேன் கஷாயம் :
துளசி, மிளகு, சுக்கு ஆகியவை இயற்கையான ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் கொண்டவை.
தேவையான பொருட்கள்:
5-6 துளசி இலைகள்
1/2 டீஸ்பூன் மிளகுத் தூள்
1/2 டீஸ்பூன் சுக்கு தூள்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடி
1 டீஸ்பூன் தேன்
1 கப் நீர்
செய்முறை:
* ஒரு கடாயில் நீரை கொதிக்க வைத்து, அதில் துளசி, மிளகு, சுக்கு, சீரகப் பொடி சேர்க்கவும்.
* 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும்.
* தேன் கலந்து சூடாக பருகவும்.
பயன்கள்:
* இது சளி அகற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
* சளியை வெளியேற்றுவதுடன், கபத்தை குறைக்கும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
* சீரகப் பொடி செரிமானத்தை மேம்படுத்தி, தொந்தரவுகளை குறைக்க உதவும்.
3. இஞ்சி, எலுமிச்சை, தேன் கஷாயம் :
இஞ்சி மற்றும் எலுமிச்சை இரண்டும் உடலில் தேங்கிய சளியை கரைத்து வெளியேற்ற உதவுகின்றன.
தேவையான பொருட்கள்:
1 டீஸ்பூன் இஞ்சிச்சாறு
1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு
1 டீஸ்பூன் தேன்
1/2 டீஸ்பூன் புதினா இலைச்சாறு
1 கப் வெந்நீர்
செய்முறை:
* வெந்நீரில் இஞ்சிச்சாறு, எலுமிச்சைச் சாறு, புதினா இலைச்சாறு சேர்க்கவும்.
* தேன் கலந்து, சிறிது நேரம் ஆறிய பிறகு பருகவும்.
பயன்கள்:
* சளியை குறைத்து, மூச்சு திணறலைத் தணிக்கும்.
* தொண்டை வீக்கத்தைக் குறைக்கும்.
* உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகின்றது.
* புதினா இலைச்சாறு மூச்சு திணறலை குறைக்கும்.
4. கரிசலாங்கண்ணி கஷாயம்
அரத்தி இலை மற்றும் கரிசலாங்கண்ணி இலை இரண்டும் இயற்கையான உயிர்ச்சத்து நிறைந்த மூலிகைகள் ஆகும்.
தேவையான பொருட்கள்:
5-6 அரத்தி இலைகள்
5-6 கரிசலாங்கண்ணி இலைகள்
1/2 டீஸ்பூன் சுக்கு தூள்
1/2 டீஸ்பூன் கருப்பு மிளகு தூள்
1 டீஸ்பூன் தேன்
1 கப் நீர்
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து, அதில் அரத்தி இலை, கரிசலாங்கண்ணி இலை, சுக்கு, மிளகு தூள் சேர்க்கவும்.
* 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும்.
* தேன் கலந்து பருகவும்.
பயன்கள்:
* இது உடலின் சளியை விரைவாக வெளியேற்ற உதவும்.
* கபத்தை கட்டுப்படுத்தி, மூச்சு விடுதலை சீராக செய்யும்.
* உடலின் பசியின்மை தன்மையை குறைத்து, ஆற்றலை வழங்கும்.
இந்த முறைகளை பின்பற்றிய பிறகும், தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் சளி குறையாமல் இருந்தால் உடனடியாக டாக்டரிடம் சென்று உரி பரிசோதனைகள் செய்து கொண்டு, கிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. நீண்டகால சளி பிரச்சனை உள்ளவர்கள், ஒரு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே இந்தக் கஷாயங்களை பயன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.