வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க இந்த 9 பழங்களை சாப்பிடுங்க!!

Published : Feb 21, 2025, 06:58 PM ISTUpdated : Feb 21, 2025, 07:18 PM IST
வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க இந்த 9 பழங்களை சாப்பிடுங்க!!

சுருக்கம்

 நீர்ச்சத்து குறைபாடால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க, சில குறிப்பிட்ட உணவுகளை தினமும் உணவில் சேர்த்து, ஆரோக்கியமான வாழ்வை நடத்துவது அவசியம். இந்த உணவுகளை சமையலில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் நீர்ச்சத்து குறைபாட்டை எளிதில் சமாளிக்கலாம். தண்ணீர்  மட்டுமின்றி, நீர்ச்சத்து அதிகமான உணவுகளும் உடலுக்கு அவசியம் என்பதனை உணர்ந்து, தினசரி உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடலுக்கு நீர்ச்சத்து மிக முக்கியம். போதிய அளவு நீரை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால், உடலில் நீர்ச்சத்து குறையும். நீர்ச்சத்து குறைபாட்டால் தோல் வறட்சியாகும், சோர்வு ஏற்படும், செரிமானக் கோளாறுகள் உருவாகும். இதனை தவிர்க்க, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். உடலில் நீர்ச்சத்து உடனடியாக அதிகரிக்கும், எப்போதும் உடலை நீர்த்தன்மையுடன் வைத்திருக்கவும் விரும்பினால் அதற்கு இந்த 9 பழங்கள் உங்களுக்கு கை கொடுக்கும். வெயில் காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டிய 9 பழங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நீர்ச்சத்தை அதிகரிக்கும் 9 பழங்கள் :

1. வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காய் 96% நீர்ச்சத்தைக் கொண்டிருப்பதால், உடலில் நீர்ச்சத்தை பாதுகாக்க உதவுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடெண்டுகள் அதிகம் இருப்பதால் தோலுக்கு பளபளப்பை வழங்கும். வெள்ளரிக்காயை உண்ணுவது மட்டும் அல்லாது, சமையலில் சேர்த்தும் பயன்படுத்தலாம். மேலும், வெள்ளரிக்காயில் உள்ள சத்துகள் சிறுநீரக செயல்பாட்டை அதிகரிக்க உதவுகின்றன. இதனை சாலட், பச்சடி, கூட்டு ஆகியவற்றாகவும் விதவிதமான முறைகளில் செய்து சாப்பிடலாம்.

2. தர்பூசணி :

தண்ணீரின் ஒட்டுமொத்த உறைவிடமாக விளங்கும் தர்பூசணி, 92% நீரை கொண்டுள்ளது. உடலுக்கு சத்துகளையும், ஹைட்ரேஷனையும் ஒரே நேரத்தில் வழங்கக்கூடிய சிறந்த பழமாகும். இதில் லைகோபீன் அதிகம் இருப்பதால் இதய ஆரோக்கியத்துக்கும் பயனளிக்கும். மேலும், தர்பூசணியில் உள்ள அமினோ ஆசிட்கள் உடல் தசைகளை மேம்படுத்த உதவுகின்றன.

3. தக்காளி : 

தக்காளி 94% நீரை கொண்டுள்ளது. இது உடலில் நீர்ச்சத்து அளவை சீராக வைத்திருக்க உதவுவதோடு, வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நிறைந்துள்ளது. தக்காளியை பச்சையாக உண்ணலாம், சாலட்களில் சேர்க்கலாம், அல்லது ஜூஸாக பருகலாம். மேலும், இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. தக்காளி அழகை அதிகரிக்கவும், தோலை பளபளப்பாக்கவும் உதவுகிறது.

4. ஸ்ட்ராபெரி :

சுவையான மற்றும் குறைந்த கலோரியுள்ள ஸ்ட்ராபெரி 91% நீர்ச்சத்தைக் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், உடல் எடை குறைக்கும் சக்தியையும் பெற்றுள்ளது. இதனை ஸ்மூத்தி, சாலட், அல்லது டெசர்ட் வகைகளில் சேர்த்து உண்ணலாம். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் மூட்டுக்களை பாதுகாக்க உதவுகின்றன. அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாக இது உள்ளது.

5. பீச் பழம்:

இதில் ஊட்டத்துக்கள் அதிகள். இதில் கிட்டதட்ட 90 % நீர்ச்சத்து உள்ளது. இதில் பல முக்கிய வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை அதிகம் உள்ளன. குறிப்பாக வைட்டமின் ஏ, சி,பி மற்றும் பொட்டாசியம் அதிகம். அதனால் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகப்படுத்தவும் இது உதவுகிறது.

6. கேரட் : 

கேரட் 88% நீரை கொண்டிருப்பதால், நீர்ச்சத்து அளவை பராமரிக்க உதவுகிறது. இது கண்களின் ஆரோக்கியத்திற்கும் சிறந்த உணவாகும். மேலும், இதில் பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளதால், தோல் மற்றும் இளைப்பு குறைப்பு நன்மைகளும் கிடைக்கின்றன. கேரட் சாறானது தசைகளின் செயலை மேம்படுத்த உதவுகிறது.

7. பப்பாளி : 

பப்பாளியில் 88% நீர் உள்ளது. இதில் எங்கேம்ஸ் அதிகம் இருப்பதால், உணவு செரிமானத்தை விரைவுபடுத்தும் தன்மை கொண்டது. இது பசியை தணித்து, நீர்ச்சத்து அளவை சரியாக பராமரிக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் ஏ தோல் ஆரோக்கியத்திற்கும் பயன் அளிக்கிறது.

8. ஆரஞ்சு : 

ஆரஞ்சு பழம் 86% நீரைக் கொண்டிருக்கிறது. இதில் சிட்ரிக் ஆசிட் இருப்பதால், உடலில் உள்ள நச்சுச்சத்துகளை நீக்கி, புத்துணர்ச்சி அளிக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வைட்டமின் சி அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும், ஆரஞ்சில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு பலம் அளிக்க உதவுகிறது.

9. கொய்யாப்பழம் : 

கொய்யாப்பழத்தில் 80% நீர் அடங்கியுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, இரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான ஆரோக்கியத்திற்கும் பயனாகும். கொய்யாப்பழத்தில் உள்ள பைபர் உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க
Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க