தலை சுற்றுதா..? செலவே இல்லாமல் குணமாக சூப்பரான 2 பாட்டி வைத்தியம்!!

By Kalai SelviFirst Published Jun 24, 2024, 1:50 PM IST
Highlights

ஒரு பைசா கூட செலவில்லாமல் தலை சுற்றலைப் போக்க அருமையான பாட்டி வைத்தியம். உடனே பின்பற்றுங்கள்.

தலை சுற்றல் என்பது ஒரு நோயல்ல. மேலும், தலை சுற்று என்றாலே அது ஒரு மூளை தொடர்பான பிரச்சனை என்று நம்மில் பலர் நினைக்கிறார்கள். ஆனால், அது தவறு. இதற்கு காரணம் முதலில் காது தான் தெரியுமா..? ஆம், இதுகுறித்து நிறைய பேருக்கு தெரிவதில்லை. 

ஆனால் அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா..? ஏனெனில், காதானது கேட்பதற்கு மட்டுமல்ல நம் உடலை சமநிலைப்படுத்தவும் பெரிதும் உதவும் ஒரு முக்கிய உறுப்பாகும். முக்கியமாக காதில் பிரச்சனை ஏற்படும் போது, நம் உடலானது கட்டுப்பாட்டை இழந்து தலை சுற்றுவது போல் இருக்கும் அல்லது சுற்றி உள்ள பொருட்கள் நம்மை சுற்றுவது போல் இருக்கும். இதற்கு ஆங்கிலத்தில் 'வெர்டிகோ'  (vertigo)என்று பெயர். ஆகையால், இந்த பதிவில் தலை சுற்றல் யாருக்கெல்லாம் வரும்.. அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் வீட்டு வைத்தியம் என்னென்ன என்பதை குறித்து இப்போது பார்க்கலாம்.

Latest Videos

இதையும் படிங்க:  எச்சரிக்கை: உங்களுக்கு அடிக்கடி திடீரென தலை சுற்றல் ஏற்படுகிறதா?அதற்கு இந்தப் பிரச்சனை தான் காரணம்..!!

இந்த பிரச்சனை யாருக்கெல்லாம் வரும்?:
பொதுவாக, முப்பது வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் என யாருக்கு வேண்டுமானாலும் இந்த பிரச்சனை வரலாம். ஆனால், முக்கியமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு
100இல், 10 பேருக்கு தான் கட்டாயம் இந்த பிரச்சனை அதிகமாக வருமாம். அதிலும் குறிப்பாக, ஆண்களை விட பெண்களுக்கு தான் இந்த பிரச்சனை அதிகமாகவே வருமாம்.

காரணங்கள் என்ன?:
இந்த பிரச்சனையானது 80 சதவீதம் பேருக்கு காதுகளாலும், 20 சதவீதம் பேருக்கு மற்ற பிரச்சனைகளாலும் ஏற்படுகின்றது. அவை..உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், இரத்த சோகை, ஒற்றைத் தலைவலி, ஊட்டச்சத்து குறைபாடு, கட்டுக்கடங்காத நீரிழிவு பிரச்சினை, தைராய்டு பிரச்சனை, கழுத்து எலும்பு பிரச்சினை, கர்ப்ப காலத்தில் ஆரம்ப கட்டம், இதயத்துடிப்பு கோளாறுகள், மன அழுத்தம், தலை காயங்கள், தூக்கமின்மை, பார்வக்கோளாறுகள், மருந்துகளின் பக்க விளைவுகள்  என இது போன்ற பல காரணங்கள் தலை சுற்றலுக்கு வழிவகுக்கும்.

இதையும் படிங்க: Exercise செய்த பிறகு தலைவலி வருதா..? காரணம் இதுதாங்க..!

அறிகுறிகள் என்ன?:
மயக்கம், வயிற்றுப் புட்டல், வாந்தி, கண் சொருகுவது, தலை சுற்றுவது போல் உணர்வு, நிற்க முடியாத நிலை ஆகியவை ஆகும்.

தலை சுற்றலுக்கான பாட்டி வைத்தியம்:

  • தலை சுற்றல் பிரச்சனை உள்ளவர்கள் பெரிய நெல்லிக்காயை தேனில் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை குணமாகும்.
  • மற்றொரு வைத்தியம் என்னவென்றால், உங்களுக்கு தேவையான அளவு இஞ்சியை நன்றாக கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி அதை தேனில் போட்டு மூன்று நாட்கள் நன்கு ஊற வைக்கவும். பிறகு அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் மூன்று இஞ்சி துண்டுகளை சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை விரைவில் சரியாகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!