
முடக்கத்தான் கீரை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நன்மைகள் கொண்ட இந்த முடக்கத்தான் கீரையானது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது. குறிப்பாக மூட்டு வலிக்கு இந்த கீரை அருமருந்தாகும். முடக்கத்தான் கீரையை மூட்டு வலிக்கு மட்டுமல்ல சளி, இருமல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தரும். இப்படி பல நன்மைகளைத் தரும் முடக்கத்தான் கீரையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சாப்பிடலாம். சரி இப்போது இந்த பதிவில் முடக்கத்தான் கீரையை எந்த பிரச்சினைக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
முடக்கத்தான் கீரை தோசை
மூட்டு வலியை குணமாக்க முடக்கத்தான் கீரை சிறந்த மூலிகையாகும். எனவே மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை தோசையாக சாப்பிடலாம். இந்த தோசை செய்வதற்கு ஒரு கைப்பிடி அளவு முடக்கத்தான் கீரை, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து அந்த கலவையை தோசை மாவுடன் கலந்து பிறகு தோசை கல்லில் ஊற்றி சாப்பிடலாம். இந்த தோசைக்கு தேங்காய் சட்னி வைத்து சாப்பிடலாம். சுவை அருமையாக இருக்கும்.
முடக்கத்தான் கீரை சூப்
முடக்கத்தான் கீரை சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக இருக்கும். இந்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்க முடக்கத்தான் கீரையை சூப் போட்டு குடிக்கலாம். இந்த சூப் செய்வதற்கு சீரகம், மிளகு, பூண்டு ஆகியவற்றை தட்டி பிறகு அதை ஒரு கடாயில் போட்டு வதக்கி அதனுடன் சிறிதளவு நெய் சேர்க்க வேண்டும். பிறகு இரண்டு கைப்பிடி அளவு முடக்கத்தான் கீரையை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இலைகள் நன்றாக வதங்கியதும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது சூப்பரான முடக்கத்தான் கீரை சூப் ரெடி. குழந்தைகள், வயதானவர்களுக்கு சளி ஏற்பட்டால் இந்த சூப் செய்து கொடுங்கள். உடனடி நிவாரணம் கிடைக்கும்.
முடக்கத்தான் கீரை துவயல்
ஆர்த்ரிட்டிஸ் குணமாக முடக்கத்தான் கீரை துவையல் சாப்பிடலாம். இந்த துவையல் செய்வதற்கு கடாய் ஒன்றில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு அதில் வரமிளகாய், உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும். பிறகு முடக்கத்தான் கீரையும் சேர்க்கவும். பின் முடக்கத்தான் கீரையையும் சேர்க்கவும். அதன் பிறகு அதில் அரைக்கப் துருவிய தேங்காய், சிறிதளவு புளி மற்றும் கொஞ்சமாக உப்பு சேர்த்து அரைக்கவும். அவ்வளவுதான் முடக்கத்தான் கீரை துவையல் தயார். சூடான சாதத்தில் நெய் ஊற்றி இந்த முடக்கத்தான் கீரை துவையல் வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
முடக்கத்தான் கீரையின் பிற நன்மைகள் :
- வாத நோயிலிருந்து நிவாரணம் கிடைக்க முடக்கத்தான் கீரை சிறந்த தேர்வாகும்.
- சொறி, சிரங்கு நோய்களுக்கு முடக்கத்தான் கீரையை பற்றி வைத்தால் நிவாரணம் கிடைக்கும்.
- தலைவனின் பிரச்சனைக்கும் முடக்கத்தான் கீரை உதவுகிறது
- காது வலி பிரச்சனைக்கும் முடக்கத்தான் கீரை நன்மை பயக்கும்.
முடக்கத்தான் கீரை ஏராளமான நன்மைகளை வழங்குவதால் நம்முடைய அன்றாட உணவில் முடக்கத்தான் கீரையை சேர்த்துக் கொள்வது நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.