"அம்மா ரொம்ப பசிக்குது"- துடித்த குழந்தைகள்..!ரூ.150-க்கு தலைமுடியை விற்று பசி தீர்த்த தாய்..! இப்படியும் சமூகத்தில்...

By ezhil mozhiFirst Published Jan 10, 2020, 5:18 PM IST
Highlights

150 ரூபாய்க்கு தலைமுடியை விற்று குழந்தையின் பசியைப் போக்கி மீதமுள்ள பணத்தில் வாங்கி கொடுக்க திட்டமிட்டு இருந்துள்ளார். 

"அம்மா ரொம்ப பசிக்குது"- துடித்த குழந்தைகள்..!ரூ.150-க்கு தலைமுடியை விற்று பசி தீர்த்த தாய்..! இப்படியும் சமூகத்தில்...    

சேலம் பொன்மார் பேட்டை அருகே உள்ள மன்னர் பாளையத்தை சேர்ந்த பிரேமா என்பவர் தன் 3 குழந்தைகளின் பசியை போக்க தன் தலைமுடியை ரூபாய் 150 விற்ற சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

பிரேமாவின் கணவர் செல்வம் செங்கல்சூளை வியாபாரம் செய்வதற்காக 4 லட்சம் ரூபாய் கடன் பெற்று தன் நண்பரிடம் கொடுத்து உள்ளார். ஆனால் நண்பர் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவானதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான செல்வம் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் மனைவி பிரேமா மற்றும் குழந்தைகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் கணவரை இழந்து தவித்து வந்த பிரேமா கணவர் வாங்கிய கடனை அடைப்பதற்காக அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் தனக்கு போதிய வருமானம் இல்லாததால் குழந்தையின் பசியைப் போக்குவதற்காக தன் தலைமுடியை விற்றுவிட்டார்

150 ரூபாய்க்கு தலைமுடியை விற்று குழந்தையின் பசியைப் போக்கி மீதமுள்ள பணத்தில் வாங்கி கொடுக்க திட்டமிட்டு இருந்துள்ளார். இதனை அறிந்த செங்கல்சூளை உரிமையாளர் ரகு இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட வே பின்னர் பொதுமக்கள் சிலர் பிரேமாவிற்கு ஒரு லட்சம் வரை உதவி செய்து உள்ளனர்.

மேலும் கைம்பெண் உதவி தொகை மூலம் மாதம் ரூபாய் 1000 பெறும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.ரேஷன் பொருட்களை பெருவகற்கும் வழி வகை செய்யப்பட்டு உள்ளது. பசிக்காக உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு தான் இந்த சமூதாயத்தில் ஏழை மக்களின் நிலை உள்ளதா என மனக்கவலை அனைவரிடமும் பற்றி உள்ளது. 

click me!