அப்பா எப்போது வந்து உணவு ஊட்டி விடுவார்..! "சப் இன்ஸ்பெக்டர்" இறந்தது கூட தெரியாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி மகள்..!

By ezhil mozhiFirst Published Jan 10, 2020, 1:37 PM IST
Highlights

வில்சனின் இறுதிச் சடங்கிலும் டிஜிபி திரிபாதி கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். அப்போது வில்சனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த போது அவருடைய மனைவி மற்றும் இரண்டு மகள்கள் துக்கம் தாங்காமல் கதறி கதறி அழுதனர். 

அப்பா எப்போது வந்து உணவு ஊட்டி விடுவார்..! "சப் இன்ஸ்பெக்டர்"  இறந்தது கூட தெரியாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி மகள்..!

களியக்காவிளை சோதனைகள் சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.அதன்பிறகு தப்பிச் சென்ற இரண்டு குற்றவாளிகளின் புகைப்படம் வெளியிடப்பட்டு தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர் போலீசார். இந்த நிலையில் டிஜிபி திரிபாதி கன்னியாகுமரி மாவட்டம் வந்து தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்க கேரள போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

வில்சனின் இறுதிச் சடங்கிலும் டிஜிபி திரிபாதி கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். அப்போது வில்சனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த போது அவருடைய மனைவி மற்றும் இரண்டு மகள்கள் துக்கம் தாங்காமல் கதறி கதறி அழுதனர். 

வில்சனுக்கு 2 மகள்கள். முதல் மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. குறிப்பாக வில்சனின் இரண்டாவது மகள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர் குழித்துறை அருகே உள்ள ஓர் மனநிலை குன்றிய பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார். இதன் காரணமாகவே இரண்டாவது மகள் வினிதா மீது அதிக பாசம் காட்டுவர். தினமும் வில்சன் வந்தபிறகே வினிதா சாப்பிடுவாராம். இவருக்கு தினமும் சாப்பாடு போட்டுக் கொடுப்பதற்காகவே வில்சன் வேலை முடித்து நேரடியாக வினிதாவை பார்க்க சென்று விடுவாராம்.

அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடியில் வேலை பார்த்து வந்த அவர், இடமாறுதல் வாங்கி வினிதாவை கவனித்துக் கொள்வதற்காக குமரி மாவட்டம் வந்திருந்தார்.இந்த நிலையில் அப்பா எப்போது வருவார் என.. என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் வினிதா கதறி கதறி அழுதுள்ளார். அப்பா வேலைக்கு சென்று எப்போது வருவார் என தொடர்ந்து அவருடைய உறவினர்கள் மற்றும் யார் வந்தாலும் இதே வார்த்தையை சொல்லி வினிதா கேட்ட விதம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

click me!