அதில், "ஐயா தமிழ் இயக்குனர்களே... இனிமேல் ஐஏஎஸ் ஐபிஎஸ் பின்புலத்துடன் எந்த படமும் எடுக்காதீங்க... உங்க லாஜிக் ஓட்டையில எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்கிறது" என தெரிவித்து உள்ளார்.
ப்ளீஸ்.... ஐஏஎஸ் ஐபிஎஸ் பின்புலத்துடன் படம் எடுக்காதீங்க...! அலெக்ஸ் பால் மேனன் IAS அதிரடி.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான தர்பார் திரைப்படத்திற்கு பிறகு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. ரஜினியின் ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடி வரும் இந்த ஒரு தருணத்தில் தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் என்பவர் ஒரு வித்யாசமான கோரிக்கையை வைத்து உள்ளார்.
அதில், "ஐயா தமிழ் இயக்குனர்களே... இனிமேல் ஐஏஎஸ் ஐபிஎஸ் பின்புலத்துடன் எந்த படமும் எடுக்காதீங்க... உங்க லாஜிக் ஓட்டையில எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்கிறது" என தெரிவித்து உள்ளார்.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகியுள்ள இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா, சுனில் ஷெட்டி, ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடித்திருக்கின்றனர். மேலும் யோகிபாபு ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.
நடிகர் ரஜினி மும்பை போலீஸ் கமிஷனராக இந்த படம் படத்தில் நடித்திருக்கிறார். இப்படி ஒரு தருணத்தில் ஐஏஎஸ் அதிகாரியான அலெக்ஸ் பால் மேனன் இவ்வாறு குறிப்பிட்டிருப்பது இந்த படத்தில் ரஜினியின் ரோல் தானோ என அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.