குடி குடியை கெடுத்தது..! எலி மருந்தை அருந்திய மனைவி மகள்..! பிறகு நடந்து என்ன..?

thenmozhi g   | Asianet News
Published : Mar 11, 2020, 01:35 PM IST
குடி குடியை கெடுத்தது..! எலி மருந்தை அருந்திய மனைவி மகள்..! பிறகு நடந்து என்ன..?

சுருக்கம்

ரமேஷுக்கு குடிபழக்கம் இருப்பதால் அவ்வப்போது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கமாக வைத்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

குடி குடியை கெடுத்தது..! எலி மருந்தை அருந்திய மனைவி மகள்..! பிறகு நடந்து என்ன..?  

மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி பெயர் பிரேமா டெய்லரிங் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சரோஜா என்ற மகளும் உள்ளார். மகளுக்கு தற்போது 17 வயது ஆகிறது.

ரமேஷுக்கு குடிபழக்கம் இருப்பதால் அவ்வப்போது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கமாக வைத்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரேமாவை அடித்து உதைத்து துன்புறுத்தி உள்ளார். இதில் மிகுந்த மனவேதனை அடைந்த பிரேமா வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து அருந்தினார்.

இதனை பார்த்து அதிர்ச்சியான மகள் சரோஜாவும் அவரிடம் இருந்த எலி மருந்தை வாங்கிக் குடித்துவிட்டார். இதில் இரண்டு பேரும் மயங்கி கீழே விழுந்ததை பார்த்து ரமேஷ் அதிர்ச்சியில் அலறினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து உயிருக்கு போராடியர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Uric Acid : யூரிக் அமில பிரச்சினை இருந்தா இந்த '4' பருப்பு வகைகளை சாப்பிடாதீங்க! நிலைமை மோசமாகிடும்
Leadership Skills: உலகையே வழிநடத்தும் 5 ரகசியங்கள்! இனி நீங்கதான் எல்லோருக்கும் Boss!