மோடியை அழகுபடுத்த மாதம் 80 லட்சமா..? கப்ஸா கதைக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ..!

By ezhil mozhiFirst Published May 11, 2019, 6:54 PM IST
Highlights

பிரதமர் மோடியை அழகுபடுத்துவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி, இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கினர். அதிலும், அவருடைய அழகுக்கு மட்டும் மாதம் 80 லட்சம் செலவிடுவதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது  

மோடியை அழகுபடுத்த மாதம் 80 லட்சமா..? 

பிரதமர் மோடியை அழகுபடுத்துவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி, இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கினர். அதிலும், அவருடைய அழகுக்கு மட்டும் மாதம் 80 லட்சம் செலவிடுவதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது  

இந்த வீடியோ மற்றும் வெளியான 80 லட்சம் ரூபாய் தொடர்பான செய்தி உண்மைதானா ? என ஆராயும் போது உண்மை வேறாக உள்ளது. 

அதன் படி, இந்த வீடியோ 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும்,மேடம் தசவுட்ஸ் வேக்ஸ் குழுவினர் அவர்களுடைய அருங்காட்சியகத்தில் மோடியின் மெழுகு சிலை வைக்க முற்பட்ட போது, அவருடைய உயரம், எடை, தலை முடி நிறம், சரும கலர் என அனைத்தையும் குறிக்கின்றனர். இந்த வீடியோ தான் தற்போது, வைரலாக பரவி வருகிறது 

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி லண்டன் மேடம் தசவுட்ஸ் அருங்காட்சியகத்தில் மோடியின் வேக்ஸ் சிலை வைக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல் 

அதற்கான youtube ஆதாரம் இங்கே..!

https://www.youtube.com/watch?v=S_Jyz0RmNBY&feature=youtu.be

பிரதமர் செய்கிற தனிப்பட்ட செலவுகள் எதுவும் அரசு நிதியில் இருந்து எடுப்பதில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

click me!