வீட்டை விட்டு வெளியேறினார் நல்லகண்ணு..! 12 ஆண்டுகளுக்கு பின் வந்த சோதனை..!

By ezhil mozhiFirst Published May 11, 2019, 4:07 PM IST
Highlights

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு சென்னை தி நகரில் உள்ள அரசு குடியிருப்பு வீட்டில் இருந்து வெளியேறி கேகே நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு சென்னை தி நகரில் உள்ள அரசு குடியிருப்பு வீட்டில் இருந்து வெளியேறி கேகே நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்த 12 ஆண்டு காலமாகவே அரசு குடியிருப்பு வீட்டிலேயே வசித்து வந்தார். இதற்கிடையில் இந்த குடியிருப்பு உள்ள பகுதியான சென்னை தி நகரில் புதிய கட்டிடம் கட்ட இருப்பதால் அங்கு வசிப்பவர்கள் வேறு இடத்திற்கு மாற்ற கோரி மாநகராட்சி தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த கட்டிடத்தில் வசித்து வந்த நல்லகண்ணு அவர்களும் அங்கிருந்து வெளியேறி கேகே நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு குடி சென்றுள்ளார்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் மற்ற குடியிருப்புவாசிகள் போல இல்லாமல் இதுநாள்வரை இத்தனை ஆண்டு காலமாக தான் குடியிருந்த அரசு குடியிருப்பு வீட்டிற்கு வாடகை கொடுத்து தங்கி இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நல்லகண்ணுவிற்கு வேறு ஒரு இடத்தில் தமிழக அரசு வீடு வழங்க வேண்டும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கு முன்னதாக அரசு குடியிருப்பை நல்லகண்ணுவுக்கு இலவசமாகவே தரப்பட்டதாகவும் ஆனால் நல்லகண்ணு தான் குடியிருந்த வீட்டிற்கு மாதம் மாதம் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

click me!