
இன்றைய பிஸியான வாழ்கை முறையில், உணவு பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை. உடல் உழைப்பில்லாமை போன்றவை பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. அதேபோன்று, நம்முடைய மேற்கத்திய கலாசாரத்தில் 40 வயதினை கடந்த அனைவருக்கும் சர்க்கரை வியாதி என்பது இயல்பாகி உள்ளது. அதுமட்டுமின்றி, குழந்தைகள் முதல் பெரியவர் வரை செல்போன் உலகத்திற்குள் மூழ்கி கிடக்கின்றனர். இணையம் மனிதனின் உயிர் நாடியாகவும் செய்யப்பட்டு வருகின்றது. இவைகள் அனைத்தும், நமக்கு வழங்குகின்ற பரிசு தூக்க குறைபாடாகும்.
மூளை தன்னை தானே புதுப்பித்து கொள்ளும், ஓர் இயற்கையான வழிமுறைதான் தூக்கம். ஒருவருக்கும் 6 லிருந்து 8 மணி தூக்கம் அவசியமான ஒன்றாகும். எனவே, தூக்கம் குறைவதால் ஏற்படும், பாதிப்புகள் பற்றி எச்சரிக்கிறார் மருத்துவர் ஆஷா லெனின்.
பிரபல youtube தளம் ஒன்றில், சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில்,
மனிதன் வாழ்வதற்கு தூக்கம் அவசியமாகும். இன்றைய நவீன உலகில் பெரும்பாலானோர் கடைபிடிக்கும், தூங்கும் நேரம் இரவு 12 மணியாகும் என்கின்றது ஆய்வறிக்கை. உலகத்தில் குறைவான நேரம் தூங்கும் பழக்கம் உடையவர்கள், விரைவாக இறக்கும் வாய்ப்பு அதிகரிப்பதற்கான ஆதாரம் உள்ளது என்றார்.
செல்போன் மோகம்:
தூங்க செல்வதற்கும் முன்பு செல்போன் பயன்படுத்துவோருக்கு காத்திருக்கும் ஆபத்துகள்..செல்போன் பயன்படுத்தும் அவற்றில் மூழ்கி செல்வதால், 10 மணியை கடந்தும், செல்போன் பயன்படுத்தும் ஆர்வத்தை தூண்டுகிறது.
சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு... உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, மாத்திரை போடுவது, இன்சுலின் ஊசி போட்டும் சர்க்கரை அளவு குறைவில்லை என்று கூறுபவர்களுக்கு, பெரும்பாலும் தூக்கம் குறைவது காரணமாக இருக்கும்.
சர்க்கரை அளவு கட்டுப்படுத்த தினமும் 8 மணி தூக்கம், அவசியமான ஒன்றாகும். இவற்றுடன் மேற்சொன்ன விஷயங்களை கடைபிடிக்கும் போது, ஒரு சில நாட்களுக்கு பிறகு சர்க்கரை அளவு குறைந்தது 140 லிருந்து 170 வரை இருக்கும் என்பது உண்மையாகும். அத்துடன் மதியம் 1 மணி நேர தூக்கம் அவசியமான ஒன்றாகும்.
ராபிட் தூக்கம், சாத்தானுக்கு சமம்:
ராபிட் தூக்கம், என்பது கண்கள் மூடிக்கொண்டு இருக்கும் போது, சுற்றி இருக்கும் விஷயங்களை கவனிப்பது. இந்த விதமான தூக்கம் உங்களுக்கு பயம், அழுகை, எரிச்சல், கோவம் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும், யாரோ அழுத்துவது, மூச்சு விட சிரமம், யாரோ அழைப்பது போன்ற உணர்வுகள் ஏற்படும். அதேபோன்று, குப்புற படுத்து தூங்குவது சாத்தானுக்கு சமம் ஆகும்.
தூங்கும் போது, வலது பக்கம், இடது பக்கம் தூங்கும் போது நல்லது. நுரையீரல் அல்லது அல்சர் மற்றும் அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக குப்புற படுத்து தூங்க கூடாது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.