
சமீபத்திய ஆய்வின் படி, ஆண் மலட்டுத் தன்மை 50 சதவீதம் அதிகரித்து காணப்படுவதாகவும், அவற்றின் அறிகுறிகள் பற்றியும் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
இன்றைய நவீன வாழ்கை முறையில், குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது. இன்றைய இளம் தலைமுறையினர், திருமணமாகி ஓரிரு ஆண்டுகளுக்கு குழந்தை பற்றிப் சிந்திப்பதே இல்லை. அதன் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள முயலும்போது, முறையில்லாத உணவு பழக்கங்களால் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, கருவுறுதல் இயற்கை முறையில் நிகழாததால், செயற்கை கருத்தரிப்பு முறையினை நோக்கி பெரும்பாலான தம்பதியினர் செல்கின்றனர்.
வளரும் நாடுகளில் நான்கு தம்பதிகளில் ஒருவர் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் கூறுகிறது. சமீபத்திய ஆய்வின்படி, உலகம் முழுவதிலும் குழந்தையின்மை பிரச்சனையால், 15 சதவீத தம்பதிகள் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் கூற்றுப்படி, பெண்கள் கருவுறாமைக்கு ஆண்களிடையே இருக்கும் மலட்டு தன்மை 50 சதவீதம் முக்கிய காரணமாக உள்ளது. எனவே, மலட்டுதன்மைக்கு காரணமாக அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என்கின்றனர்.
சமீபத்திய ஆய்வின் படி, ஆண்களின் மலட்டு தன்மைக்கான முக்கிய அறிகுறிகள்:
1. சிறுநீர் கழிக்கும் போது, விரைகளைச் சுற்றி வலி அல்லது வீக்கம்.
2. ஆண்களின் மார்பகங்களில் அசாதாரண மாற்றங்கள்
3. தொடர்ச்சியான சுவாச நோய்த்தொற்றுகள்
4. முடி கொட்டும் பிரச்சனை இருக்கும்
5. இடுப்பு பகுதியில் வலி, விந்தணு எண்ணிக்கை குறைதல் போன்றவையாகும்.
6. குறைந்த உடலுறவு இயக்கம், விந்து வெளியேறுவதில் சிரமம், விறைப்புத்தன்மை.
உடற்பருமன் முக்கிய காரணம்:
கருத்தரித்தலில் உங்கள் உடற்பருமன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடற்பருமன் அதிகரிப்பு அல்லது உடற்பருமன் குறைப்பு, ஹார்மோன்களின் செயல்பாடுகளைப் பாதிக்கும். இவை ஆண் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும். அதேபோன்று, அளவில்லா உணவு உடல் ஆரோக்கியத்தைக் கெடுப்பது மட்டுமின்றி உடல் எடையினை அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
ஆல்கஹால் மற்றும் புகைபிடித்தல்:
ஆல்கஹால் மற்றும் புகைபிடித்தல் உங்கள் நுரையீரலை மட்டுமின்றி, உங்கள் கருவுறுதலையும் பாதிக்கும்.இது தொடர்பாக சமீபத்திய ஆய்வில், அதிகப்படியாக ஆல்கஹால் குடிக்கும் ஆண்களே மலட்டுத் தன்மை, குறைபாடுகளை அதிக அளவில் எதிர்கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம் முக்கிய காரணம்:
சில சமயங்களில், உடல்நிலை சரியாக இருந்தாலும், மன அழுத்தம் அதிகமாக இருந்தால் கருத்தரித்தல் தாமதமாகும். மலட்டுத் தன்மையால் ஏற்படும் மன அழுத்தம் ஆண்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதுபோன்ற சூழலில், யோகா மற்றும் நடை பயிற்சி செய்வது அவசியம்.
இதனைத் தவிர்த்து, நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான சில பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் மலட்டுத்தன்மையை சரி செய்து இயற்கை முறையில் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.