உஷார்...! ரேஷன் கடை திருடர்கள்...!!! S M S இல் போலி பில்…!!!

First Published Dec 2, 2016, 2:09 PM IST
Highlights


உஷார்...! ரேஷன் கடை திருடர்கள்...!!! S M S இல் போலி பில்…!!!

அதிமுக்கியமான  குடும்ப  அட்டையுடன் ( ரேஷன்   கார்டு ) உடன்   ஆதார்  எண்ணை இணைக்கும்  பணி  மும்முரமாக   நடந்து  வருகிறது.  இந்த  பணி  முழுவதுமாக  நடைபெற்று முடிந்தால்   மட்டுமே  “ புதிய ஸ்மார்ட்  ரேஷன் கார்டு வழங்கப்படும்”  என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , வாங்காத  பொருட்களுக்கு  போலியான  பில்  போட்டு , பொருட்களை  கள்ள  மார்க்கெட்டில்  விற்பதாக  செய்திகள் வெளியாகி உள்ளது.

அதாவது,   ஆதார் எண்ணை இணைக்கும்  போதே , நம்முடைய    மொபைல்  எண்ணும்  பதிவு  செய்யப்படுவதால், ரேஷன்  கடையில்  பயன்படுத்தும்  மெஷின் மூலம் ,  இந்த  குறுந்தகவல் ( எஸ் எம் எஸ்)  நமக்கு  வருகிறது.

இதனால்  சந்தேகம் அடையும்  பொதுமக்கள்,  ரேஷன்  கடைகளில்  விளக்கம்  கேட்டால்,  எந்திர  கோளாறு  காரணமாக  இது  போன்ற  தவறான  எஸ்  எம்  எஸ்  வருவதாக  விளக்கம்  சொல்லி  மக்களை  ஏமாற்று வதாக  செய்திகள்  வெளியாகி உள்ளது.

 உதாரணத்திற்கு :

மாமல்லபுரம் பகுதியில் உள்ள ஒரு ரே‌ஷன் கடையில் இதேபோல் பல குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ உளுத்தம் பருப்பு வாங்கப்பட்டதாக ஏராளமானோருக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரே‌ஷன் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக   தெரிகிறது.

இந்த  முறைகேடு பற்றி பல முறை , புகார் தெரிவித்தும்  எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை என  மக்கள்  குற்றம்  சாடுகின்றனர்....

 

 

 

click me!