
மேஷ ராசி நேயர்களே..!
இன்றைய தினத்தில் தேவையில்லாத அலைச்சல் இருக்கும். முன்கோபத்தை தவிர்த்துக்கொள்வது நல்லது. சில காரியங்களை பல முறை முயன்று முடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு.
ரிஷப ராசி நேயர்களே..!
வீட்டுக்கு தேவையான மின் சாதனங்கள் வாங்கும் நேரமிது. உறவினர்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். தாய்வழி உறவினர்களுடன் சுமுகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
மிதுன ராசி நேயர்களே..!
உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி சந்தோஷமாக இருப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனைப்படி பல பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வீர்கள். திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்
கடக ராசி நேயர்களே..!
இதுநாள்வரை தாமதமாகிக் கொண்டிருந்த சில காரியங்கள் விரைவில் முழுமையடையும். பிரபலமானவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும்
சிம்ம ராசி நேயர்களே..!
இன்றைய தினத்தில் வீண் அலைச்சல் பண தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். மருத்துவச் செலவுகள் வீண் பழிகள் வந்து நீங்கும் நாள். இன்று வாகன செலவு வைக்க நேரிடலாம்.
கன்னி ராசி நேயர்களே..!
பழைய நண்பர்களால் திருப்பங்கள் ஏற்படும் நாள். இன்று சேமிக்கும் அளவிற்கு பணவரவு உங்களுக்கு கிடைக்கும். உங்கள் பிள்ளைகளுக்கு புதிய ஆடை, தேவையான பொருட்களை வாங்கி தந்து மகிழ்வீர்கள். கலைப்பொருட்களை வாங்கி உற்சாகப்படும் நாள் இது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.