தமிழகத்தில் மழை..! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...!

By ezhil mozhiFirst Published Apr 3, 2019, 6:02 PM IST
Highlights

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்துவரும் இரண்டு நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்துவரும் இரண்டு நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.

குமரி கடலில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அதே நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக வேலூர் திருவண்ணாமலை திருச்சி நாமக்கல் தர்மபுரி சேலம் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி வெப்பம் கூடுதல் ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையை பொருத்தவரையில் சில நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில நேரத்தில் அதிக வெப்பம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது நேற்று மற்றும் நேற்று முன்தினம் அதிக வெப்பம் சென்னையில் பதிவாகி இருந்தது. அதே போன்று நேற்று முன்தினம் அதிகபட்சமாக கரூரில் 107 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதிக வெப்பத்தின் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மதிய வேளையில் அருகிலுள்ள தெருவிற்கு போக கூட மிகவும் சிரமமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். 

கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள இளநீர் தர்பூசணி நுங்கு பழச்சாறு விற்பனை அதிகரித்து வருகின்றது. எனவே பொதுமக்கள் வெளியில் எங்கு சென்றாலும் எப்போதும் தன்னுடன் ஒரு குடை மற்றும்  வாட்டர் பாட்டில் வைத்திருப்பது சிறந்தது.

இதுதவிர வரும் ஜூன் மாதம் வரையில் அடிக்கடி அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்று ஏற்கனவே  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

click me!