பப்ஜி கேம் விளையாட வேண்டாமென சொன்னதுக்கே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மகன் ..! சிந்தியுங்கள்..ஆன்லைன் கேமிற்கு எப்படி அடிமையாகி உள்ளோமென..

By ezhil mozhiFirst Published Apr 3, 2019, 5:05 PM IST
Highlights

இந்திய இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் பப்ஜி என்ற ஆன்லைன் கேம் விளையாட தாய் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

இந்திய இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் பப்ஜி என்ற ஆன்லைன் கேம் விளையாட தாய் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மல்கஜ்கிரி என்ற பகுதியை சேர்ந்த கள்ளக்குறிச்சி சம்பசிவா என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் அடிக்கடி செல்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். தற்போது தேர்வு நெருங்கி வரும் எந்த சமயத்திலும் தொடர்ந்து அந்த ஆன்லைன் கேம் விளையாடி வந்ததால் தாய் கண்டித்துள்ளார்.

பின்னர் அழுதுகொண்டே வீட்டின் அறைக்குள் சென்ற மாணவன்  கதவை மூடிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் சிறிது நேரம் கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கியபடி இருந்த தன் மகனைப் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இது குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட பின்,  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் எந்த அளவிற்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதையும் அதில் முழுமையாக அடிமையாகும் இன்றைய இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதை இந்த சம்பவம் மூலமே உணர்ந்து கொள்ளலாம்

click me!