குறைந்த விலையில் தரமான மாஸ்க்..! குடிசை தொழிலாக மாறும் முகக்கவசம் தயாரிப்பு தொழில்..!

By ezhil mozhiFirst Published Apr 20, 2020, 10:56 AM IST
Highlights

 தற்போது முகக்கவசத்தை தயாரிக்கும் ஒரு குடிசை தொழிலாக மாறியுள்ளது. ஆண்கள்  மற்றும் சுய உதவி குழு பெண்கள் இணைந்து தையல் கலை தெரிந்தவர்களை வைத்து முகக் கவசங்கள் தயாரித்து விற்பனை செய்ய செய்து வருகின்றனர்.  

குறைந்த விலையில் தரமான மாஸ்க்..! குடிசை தொழிலாக மாறும் முகக்கவசம் தயாரிப்பு தொழில்..! 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த ஒரு நிலையில் இந்தியாவிலும் நாளுக்கு நாள் ஒரு நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த ஒரு நிலையில் கொரோனா பரவுதலை தடுக்க அத்தியாவசியப் பொருளாக மாறியுள்ளது மாஸ்க்.நோய் பரவுதலை தடுக்க மாஸ்க் மிக முக்கியமானதாக உள்ளது. ஒரே நேரத்தில் மிக வேகமாக பரவி வருவதால் மாஸ்க் பற்றாக்குறை அதிகரித்தது.

இந்த ஒரு நிலையில் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி மாஸ்கை பதுக்கி வைத்து மக்களுக்கு அதிக விலையில் விற்று வந்த சூழ்நிலையையும் பார்க்க முடிந்தது. இதன் காரணமாக குறைந்த விலையில் தரமான மாஸ்க் தயாரித்து கொடுக்கும் பணியில் நன்கு தையல் தெரிந்த நபர்கள் முக கவசங்களை தயார் செய்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது முகக்கவசத்தை தயாரிக்கும் ஒரு குடிசை தொழிலாக மாறியுள்ளது.ஆண்கள் மற்றும் சுய உதவி குழு பெண்கள் இணைந்து தையல் கலை தெரிந்தவர்களை வைத்து முகக் கவசங்கள் தயாரித்து விற்பனை செய்ய செய்து வருகின்றனர்.  

தற்போது இந்த தொழில் குமரி மாவட்டத்தில் குடிசை தொழிலாகவே மாறி உள்ளது. அதே போன்று தயாரிக்கப்படும் மாஸ்க்கை விற்பனை செய்வதற்கு பல முதியவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் கொரோனா பரவாமல் தடுக்க, அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே செல்லும் போது, கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதே வேளையில் சாதாரண மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான மாஸ்க் கிடைக்கும் வகையில் குமரி  மாவட்ட மக்கள் மாஸ்க் தயாரிப்பை குடிசை தொழிலாகவே செய்து வருகின்றனர்

click me!