உள்நாட்டு விமான சேவை எப்போது தொடங்கும், ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு.!!

By Thiraviaraj RMFirst Published Apr 18, 2020, 10:45 PM IST
Highlights

இந்தியாவில் மே 4-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

T.Balamurukan

இந்தியாவில் மே 4-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

  கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், மே 3 ஆம் தேதி வரைக்கும் ஊரடங்கு நீட்டித்துள்ளது மத்திய அரசு.இந்தியாவில் இதுவரைக்கும் 14378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.24 மணிநேரத்தில் மட்டும் 43 பேர் பலியானதோடு,991 இந்த நோய் தொற்றால் பாதிப்படைந்துள்ளார்கள்.உலகம் முழுவதும் 2250119 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,154241பேர் உயிரிழந்துள்ளார்கள்.571577பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.

 கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் வரும் 20 ஆம் தேதிக்குப் பிறகு சில தொழில் நிறுவனங்கள், சேவைகளைத் தொடங்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருக்கிறது. மே 3-ம் தேதி முதல் இந்த ஊரடங்கு உத்தரவு முடிவடைய கூடிய  நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.இந்த நிலையில் தற்போது ஏர் இந்தியா நிறுவனமானது தனது விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.., " இந்தியாவில் மே 4-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும். மே 4 ஆம் தேதி முதல்  குறிப்பிட்ட சில உள்நாட்டு  விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அதேபோல், ஜூன் 1 ஆம் தேதி முதல் சர்வதேச விமானங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது. இதனை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர்  ஹர்தீப்சிங் பூரி விமான சேவை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்." அரசு அறிவித்த பின் முன்பதிவுகளை விமான நிறுவனங்கள் புக்கிங்க் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.

click me!