
கொழுப்பு குறையும்
முன்னதாகவே குறிப்பிட்டது போல கொய்யா இலையில் ஆண்டி ஆக்ஸிடெண்ட், ஆண்டி பாக்டீரியா எதிர்ப்பு திறன், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன. இதை தினமும் சாப்பிட்டு வரும்போது உடலில் தேங்கி இருக்கும் அடர்த்தியான கெட்டக் கொழுப்புகளை நீக்குகிறது. மேலும் கொழுப்பு அமிலங்களையும் குறைக்க உதவுகிறது.
இருதய நோய்களை விரட்டு
கொய்யா இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம் தொண்டை புண் மற்றும் சளி தேக்கத்துக்கு நல்ல தீர்வாக அமையும். மேலும் இருமல், மூக்கடைப்பு போன்ற பிரச்னைகளையும் வர விடாமல் தடுக்கும். கொலை இலையை காயவைத்து, அதை பொடிப் பண்ணிவிட வேண்டும். தினமும் தேனில் அதை கலந்து சாப்பிட்டு வந்தால் இருதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படாது. அதுதவிர, உடல் எடை விரைவாக குறைக்கவும் இது உதவும்.
மூச்சுக் குழாய் ஒவ்வாமைக்கு மருந்து
நன்றாக கொதிக்கும் நீரில் சிறிதளவு துளசி, இஞ்சியுடன் கொய்யா இலைகளையும் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொய்யா இலை வெந்த பிறகு, தண்ணீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதை தினந்தோறும் குடித்து வந்தால் மூச்சுக்குழாயில் ஏற்படும் ஒவ்வாமை நீங்கும். இதே முறை செரிமானக் கோளாறையும் தடுக்கும்.
அவசர காலை உணவுக்கு ஏற்றது ''தயிர் சாண்ட்விச்''! - ஸ்பீடா செஞ்சு சாப்பிட்டு போயிட்டே இருக்கலாம்!!
செரிமானக் கோளாறு நீங்கும்
ஐந்து கொய்யா இலைகளை, கொஞ்சம் சீரகத்துடன் சேர்த்து கொதிக்கும் நீரில் போட்டு வைக்க வேண்டும். அதை பருகி வந்தால், உடனடியாக வயிற்று சார்ந்த பிரச்னைகள் நீங்கும். செரிமானக் கோளாறு இருந்தாலும் உணவு சீக்கரம் சீரணமடையும். உணவுகளால் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும்.
இன்சுலின் சுரப்பியை தூண்டும்
கொய்யா இலைகளின் சாற்றை அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் சுரப்பியினைத் தூண்டி சுக்ரோஸ் மற்றும் மால்டோஸ் உள்ளீர்ப்பை தடுக்கிறது, மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.