இரவு தூங்குவதற்கு முன்பு இப்படி செய்யுங்க- உடல் எடை டக்... டக்-னு குறைஞ்சிடும்..!!

By Dinesh TG  |  First Published Sep 8, 2022, 10:21 PM IST

இஸ்லாம் சகோதரர்கள் போற்றி வணங்கும் குரானில் பல்வேறு மருத்துவக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் அடையாளமாகக் திகழும் சித்தா, ஆயுர்வேதம் மருத்துவ முறைகளுக்கு இணையான செய்திகள் குரானில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் அதீத் 75:76-ல் கருஞ்சீரகத்தின் பயன்பாட்டை நபிகள் நாயகம் விரிவுப்படுத்தியுள்ளார். அதன்படி மரணத்தை தவிர அனைத்து வகையான நோய் பாதிப்புக்கான அருமருந்து என ‘கருஞ்சீரகத்தை’ அவர் குறிப்பிட்டுள்ளார். குறைந்தப்பட்சம் ஒரு மனிதன் 7 கருஞ்சீரகம் விதைகளை தினமும் உட்கொண்டு வரவேண்டும். அதை கடைப்பிடிக்கும் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று குரானில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
 


உயர் ரக வைட்டமின் டி கொண்டது

நமது இந்திய சமையலில் இனிப்பு மற்றும் காரம் என இரண்டு பலகாரங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தட்டு முருக்குகளில் கருஞ்சீரகம் பயன்படுத்தப்படுகிறது. பார்ப்பதற்கு எள் போன்ற தோன்றத்தில் இருக்கும் கருஞ்சீரகம், அரபு நாடுகளில் முக்கிய உணவுகளில் சேர்க்கப்படுகிறது. இது எண்ணெய்யாகவும் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த எண்ணெய்யை தோளில் தேய்த்து வந்தால் வெண்புள்ளிகள் நீங்கும். தலையில் தடவினால் விரைவாகவே தலை முடி நரைப்படுவது தவிர்க்கப்படும்.

Tap to resize

Latest Videos

undefined

பல்வேறு வியாதிகளுக்கான அருமருந்து

மரணத்தை தவிர அனைத்து நோயிகளுக்குமான அருமருந்து என கருஞ்சீரகம் குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருஞ்சீரகத்தை நன்றாக வறுத்து, தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவு உணவு எடுத்துக் கொண்ட பிறகு, தூங்குவதற்கு முன்னதாக வெறும் 1 முதல் 2 கிராம் வரையில் எடுத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வரவேண்டும். இதன்மூலம் உடலில் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும். முடிந்தவரை எதிர்ப்புச்சக்தி உடலில் உருவான பின், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் அவ்வப்போது சிறியதாக அரிப்பு ஏற்படும். அப்போது கருஞ்சீரகத்தை தினமும் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிடலாம்.

புற்றுநோய் பரவலை தடுக்கும்

ஹோமியோபத்தி மருத்துவ முறையில் கொடுக்கப்படும் ஒரு மருந்து, புற்றுநோயால் உருவாகும் கட்டிகளை சுருக்கிடும் தன்மை கொண்டது. அந்த மருந்தில் கருஞ்சீரகம் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அந்தளவுக்கு கருஞ்சீரகம் மிகவும் வீரியம் கொண்டதாக உள்ளது. தினசரி உணவுகளிலும் இதை பயன்படுத்தி வருவதும் உடலுக்கு நல்லதை ஏற்படுத்தும்.

அவசர காலை உணவுக்கு ஏற்றது ''தயிர் சாண்ட்விச்''! - ஸ்பீடா செஞ்சு சாப்பிட்டு போயிட்டே இருக்கலாம்!!
 

சக்கரை நோயை ஒழிக்கும். 

கணையத்தில் இன்சூலினை சுரக்கவைத்து சர்க்கரை நோயை முழுமையாக இல்லாமல் ஆக்கிவிடும். இளைஞர்களில் 25 வயது முதல் 26 வயதுடையவர்கள் பலருக்கும் டைப் 2 டயாபெட்டீஸ் பிரச்னை இருந்து வருகிறது. அதை தடுக்க கருஞ்சீரகம் சிறந்த மருந்தாகும். வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் சமளவு எடுத்துக் கொண்டு, அதனுடன் ஓமம் 50 கிராம் அளவு போட்டு, அதை வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு தேக்கரண்டி பொடியை போட்டு தினமும் குடித்து வரவேண்டும். இதன்மூலம் கருமுட்டை நீர் கட்டிகள், மாதவிடாய் பிரச்னை, முறையற்ற மாதவிடாய் பிரச்னை உள்ளிட்டவை குணமடையும். ஆனால் மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப் போக்கு உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை சாப்பிடக்கூடாது. 

இருதய அடைப்பு ஏற்படாது

கருஞ்சீரகத்தை தினசரி உணவோடு சேர்த்து எடுத்துக் கொண்டு வருபவர்களுக்கு இருதய அடைப்பு வர வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதிலுள்ள தைம்மோகியூனைன் என்கிற பொருள், இருதய குழாய்க்குள் ரத்தம் உறைவதை தடுக்கும். மேலும் எல்.டி.எல், டி.ஜி.எல் போன்ற கெட்ட கொழுப்புக்களை குறைக்கும், ஹெச்.டி.எல் என்கிற நல்ல கொழுப்புக்களை அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க விரும்புவோரும் கருஞ்சீரகம், வெந்தயம் மற்றும் ஓமம் சேர்த்து சாப்பிடலாம். 
 

click me!