Maha Shivaratri mantra: மகாசிவராத்திரி நாளான இன்று சிவனின் அருளை முமுமையாக பெற இரவு முதல் காலை வரை உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
மார்ச் 1ஆம் தேதி (01.03.2022) இன்று மகாசிவராத்திரி நாளாகும்.இந்நாளில், சிவ பக்தர்கள் அதிகாலையில் குளித்து முடித்து, விரதத்தை தொடங்கி நாள் முழுவதும் சிறிதும் உறங்காமல் அருகிலுள்ள சிவன் கோயில்களுக்குச் சென்று சிவனை கண்டு தரிசித்து, மறுநாள் அதிகாலையில் சிவாலயங்களில் அபிஷேக ஆராதனைகள் முடிந்த பின் தன்னுடைய விரதத்தை முடித்துக் கொள்வதை வழக்கமாக கொள்வார்கள்.
மஹாசிவராத்திரி நாளில் சிவபெருமானை முழு பக்தியுடனும் சடங்குகளுடனும் வழிபட்டால், சிவ பெருமான மகிழ்ச்சி, செல்வம், ஆரோக்கியம் என அனைத்தையும் தருகிறார். மகாசிவராத்திரி நாளான இன்று சிவனின் அருளை முமுமையாக பெற இரவு முதல் காலை வரை உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.அப்படி உச்சரித்தால், சிவபெருமான் சிவலிங்க வடிவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் என புராணங்கள் கூறுகின்றன.
ஓம் நம சிவாய:
ஓம் நம சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம் உச்சரிப்பதால் நம் மனதிலிருந்து பயம் நீங்கும். நமக்குள் ஒரு நேர்மறையான அதிர்வை உருவாக்குகிறது.
ஓம் நமோ பகவதே ருத்ராய
ருத்திரன் மற்றும் சிவபெருமானிடம் ஆசி பெறுவதற்காக இந்த மந்திரம் உச்சரிக்கப்படுகிறது.
ஸ்ரீ ருத்ரர் காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்
ஒருவருக்கு வேலை அல்லது எந்த விஷயத்திலும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படும் போது, இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் கவனம் மற்றும் சிரத்தை அதிகரிக்கும்.
தொன்மையான சமஸ்கிருத ஸ்லோகம்
கற்பூர கௌரம் கருணாவதாரம் என்பது தொன்மையான சமஸ்கிருத ஸ்லோகமாகும். இது சைவர்களின் முழுமுதற் கடவுளான சிவனைக் குறித்து பாடப்பட்டுள்ளது. இந்த ஸ்லோகம் யஜுர் வேதத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகும்.
கற்பூர கௌரம் கருணாவதாரம்
கற்பூரகௌரம் கருணாவதாரம்
சம்சாரசாரம் புஜகேந்திரஹாரம்
சதாவசந்தம் இருதயாரவிந்தே
பவம் பவானி சகிதம் நமாமி
இந்த சிவ மந்திரம் ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்புக்காக உச்சரிக்கப்படுகிறது.
ஓம் சர்வ மங்கள்
சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே !
சரண்யே திரியம்பிகே கௌரி நாராயணீ நமோஸ்துதே !!
இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால், நம் ஆன்மாவை தெளிவுபடுத்தும். எனவே, மேற் சொன்ன மந்திரங்களை உச்சரித்து இனி வரும் நாட்களில் உங்கள் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற வாழ்த்துக்கள்!!