Maha Shivaratri 2022: சிவபெருமானுக்கு உகந்த மிக முக்கியமான விரதங்களில் இந்த சிவராத்திரியும் ஒன்று. இந்த வருடம் சிவராத்திரி மார்ச் 1 ஆம் தேதி இன்று மகாசிவராத்திரி கொண்டப்படுகிறது. அற்புதம் வாய்ந்த இந்த நன்னாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து முறையாக கடைபிடிப்பது எப்படி என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சிவபெருமானுக்கு உகந்த மிக முக்கியமான விரதங்களில் இந்த சிவராத்திரியும் ஒன்று. இந்த வருடம் சிவராத்திரி மார்ச் 1 ஆம் தேதி இன்று மகாசிவராத்திரி கொண்டப்படுகிறது. அற்புதம் வாய்ந்த இந்த நன்னாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து முறையாக கடைபிடிப்பது எப்படி என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மகாசிவராத்திரி நாளில் தூய்மையான மனதோடு, நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு, மனதார ஒரு முறை ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்தாலே போதும். உங்களுடைய பிறவிப் பலனை நீங்கள் பெறலாம்.
விரதம் இருக்கும் முறை:
எப்போதும் போலதான் விரத நாட்கள் என்றால் காலையிலேயே எழுந்து சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து விட வேண்டும். சிவராத்திரி தினமான மார்ச் 1ஆம் தேதி இன்று காலை 10 மணிக்கு முன்பாக குளித்துவிட்டு, உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, நெற்றி நிறைய விபூதி பூசிக் கொண்டு ‘ஓம் நமசிவாய’ ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை உச்சரித்து விட்டு உங்களுடைய விரதத்தை தொடங்குங்கள்.
இன்று காலை ஆரம்பிக்கக் கூடிய விரதமானது அடுத்த நாள் காலை, அதாவது 2 ம் தேதி காலை சிவபெருமானுக்கு, நான்காம் கால பூஜை நிறைவடையும்போது தான் முடிவடையும். 1 ம் தேதி காலையில் இருந்து, அடுத்த நாள் காலை 6 மணி வரை எதுவுமே சாப்பிடாமல் உபவாசம் இருந்து, நான்காம் கால பூஜை நிறைவடையும் போது சிவபெருமானுக்கு கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இடைப்பட்ட காலத்தில் நிறைய தண்ணீர் மட்டும் பருகிக் கொள்ளலாம்.
ஆனால், எல்லோருடைய உடல்நிலையும் இதற்கு ஒத்துழைக்காது. அவரவர் உடல்நிலையைப் பொறுத்து உங்களுடைய விரதத்தை மேற்கொள்ளலாம். அதன்மூலம் எந்த தெய்வ குற்றமும் ஏற்படாது.
தூங்காமல் கண் விழிக்க நேரம் எப்போது?
சிவராத்திரி என்றாலே தூங்காமல் கண் விழிக்க வேண்டும் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். முறைப்படி தூங்காமல் எப்படி கண் விழிப்பது. மார்ச் மாதம் 1-ஆம் தேதி இன்று காலை விரதத்தை தொடங்கி விட்டீர்களா? நீங்கள் தூங்கவே கூடாது. மார்ச் மாதம் 2 ம் தேதி மாலை 6 மணிக்கு சிவபெருமானை தரிசனம் செய்து விட்டு அதன் பின்புதான் உங்களுடைய தூக்கத்தை தொடர வேண்டும்.
இதுவே கண் விழிக்கும் சரியான முறை. இரவு கண் விழிக்கும்போது சிவபெருமானை நினைத்து சிவபுராணம், தேவாரம், திருவாசகம், இப்படிப்பட்ட புத்தகங்களை படிக்கலாம். இந்த பாடல்களை ஒலிக்கவிட்டு காதால் கேட்கலாம். சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்கள் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களை அறவே தவிர்ப்பது நல்லது.